மாரிசெல்வராஜ் படத்திற்காக தாறுமாறாக கபடி பயிற்சி செய்யும் துருவ் விக்ரம்.. வைரலாகும் புகைப்படம் !
சென்னை : ஆதித்ய வர்மா வெற்றியை தொடர்ந்து நடிகர் துருவ் அப்பா விக்ரமுடன் இணைந்து மகான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக மாரிசெல்வராஜ் இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார்.
மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் கபடி போட்டியை மையப்படுத்தியதாக உருவாக அதற்காக தீவிர கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் ஈடுபட்டுள்ள புகைப்படம் தற்போது கசிந்து வைரலாகி வருகிறது.

தன்னைப் போலவே மகன்
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இப்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான துருவ் விக்ரம் அதற்கு அடுத்தடுத்த தரமான கதைகளை அப்பா விக்ரம் தேர்வு செய்து நடிக்க வைத்து வருகிறார். சினிமாவில் தன்னை போலவே மகன் துருவ்வையும் நல்ல நடிகராக ஆக்க வேண்டும் என்ற முனைப்பில் முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு நடிக்க வைத்து வருகிறார்.

ஃபர்ஸ்ட் சிங்கிள் சூறையாட்டம்
அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அப்பா மகன் இருவரும் இணைந்து நடித்த படத்திற்கு மகான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் சிங்கிள் சூறையாட்டம் வெளியாகி அதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த
விரைவில் மகான் வெளியாக இருக்க அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாரிசெல்வராஜ் அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கி அந்தப் படத்தையும் சூப்பர் ஹிட் படமாக கொடுத்தார்.

தீவிர கபடி பயிற்சியில்
மிக எளிமையான மக்களின் கதையை தன்னுடைய படங்களின் மூலம் வாழ்வியலாக கூறிவரும் மாரி செல்வராஜ் அடுத்த படத்தை சில உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இயக்க உள்ளார். அதில் ஹீரோவாக நடிக்கும் துருவ் விக்ரம் கபடி வீரராக முதல் முறையாக நடிக்கிறார். இன்னும் ஓரிரு மாதத்தில் தொடங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்புக்காக துருவ் இப்போதிலிருந்தே தீவிர கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இயக்குனர் மாரி செல்வராஜ் முன்னிலையில் துருவ் தீவிர கபடி பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











