அப்பா கோப்ரா.. மகன் டிராகன்.. அட்டகாசமாக வெளியானது ’மகான்’ துருவ் விக்ரம் போஸ்டர்!
சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் மிரட்டலாக உருவாகி வரும் கேங்ஸ்டர் படம் மகான்.
ஏற்கனவே டூவீலரில் செம மாஸாக விக்ரம் அமர்ந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், ரசிகர்கள் அனைவரும் எங்கே துருவ் விக்ரமை காணவில்லையே? என கேள்விகளை எழுப்பினர்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மகான் படத்தில் துருவ் விக்ரமின் அட்டகாசமான 'தாதா' லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கம்பேக் கொடுக்கணும்
பீட்ஸா, ஜிகர்தண்டா என சூப்பரான படங்களை இயக்கி பெரிய வெற்றியை கண்ட கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தின் மூலம் சின்ன சறுக்கலுக்கு பிறகு கம்பேக் கொடுத்திருந்தார். ஆனால், அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான தனுஷின் ஜகமே தந்திரம் படம் பெரிய தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் மகான் படம் மூலம் நல்ல கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

60வது படம்
சேது, காசி, தில், தூள், சாமி, ஜெமினி, பிதாமகன், அந்நியன், ஐ என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி வரும் சியான் விக்ரமின் 60வது படம் தான் மகான். கடாரம் கொண்டான், சாமி 2 படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், விக்ரமுக்கும் ஒரு மிகப்பெரிய கம்பேக் தேவைப்படுகிறது.

துருவ் விக்ரமின் இரண்டாவது படம்
சியான் விக்ரமை தொடர்ந்து அவரது துருவ் விக்ரமும் தமிழ் சினிமாவில் ஹீரோவாகி விட்டார். ஆதித்ய வர்மா படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடித்து வரும் இரண்டாவது படம் தான் மகான். அப்பாவுடன் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என முழு நம்பிக்கையுடன் துருவ் விக்ரம் உள்ளார்.
Recommended Video

தாதா துருவ்
ஏற்கனவே சியான் விக்ரமின் அசத்தலான மகான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது துருவ் விக்ரமின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. சிக்ஸ்பேக் உடம்புடன் இருக்கும் துருவ் விக்ரமை 'தாதா' என அறிமுகம் செய்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

மகன் டிராகன்
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கோப்ரா படத்தில் நடித்துள்ள நிலையில், மகன் துருவ் விக்ரமை மகான் படத்தில் டிராகன் பேக்ரவுண்டில் அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், அப்பா கோப்ரா மகன் டிராகனா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











