பைசன் வெற்றி விழா.. எமோஷனலாக பேசிய துருவ் விக்ரம்.. இருக்காத பின்ன.. எதிர்பார்த்த ஹிட் இதானே
சென்னை: விக்ரமின் மகன் துருவ் நடித்திருக்கும் பைசன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அவருக்கு திரைத்துறையில் நல்லதொரு பயணத்தை தொடங்கி வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் பைசன் படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். விழாவில் துருவ் விக்ரம் ரொம்பவே எமோஷனலாக பேசினார்.
ஆதித்ய வர்மா, மகான் ஆகிய இரண்டு படங்களுமே விக்ரமின் மகன் துருவ்வுக்கு பெரிய திருப்புமுனையை கொடுக்கவில்லை. எனவே தனக்கான பயணத்தை எப்படியாவது கோலிவுட்டில் தொடங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில்தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடிக்க கமிட்டானார். இப்படத்துக்காக கிட்டத்தட்ட மூன்று வருடங்கள்வரை காத்திருந்தார். காத்திருந்ததோடு மட்டுமின்றி அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனிடம் கபடி பயிற்சியும் எடுத்துக்கொண்டார்.
படம் சூப்பர் ஹிட்: படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி வெளியானது. போட்டிக்கு டியூட், டீசல் ஆகிய இரண்டு படங்கள் வந்தாலும் பைசன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. முக்கியமாக துருவ் விக்ரமின் உழைப்பை பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொரு சீனிலும் அவரது நடிப்பு அவ்வளவு அருமையாக இருந்தது. கண்டிப்பாக இப்படத்திலிருந்துதான் அவரது பயணம் திரைத்துறையில் தொடங்கியிருக்கிறது.

பைசன் வெற்றி விழா: இந்நிலையில் பைசன் படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினரும், பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டார்கள். விழாவில் பேசிய துருவ் விக்ரம், "ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. நமது படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறீர்கள். இப்படத்துக்காக எல்லோரும் பெரிய உழைப்பை போட்டிருக்கிறார்கள். நிறைய ஃபைட்டர்ஸ் உண்மையாகவே அடி வாங்கினார்கள்.
ரஞ்சித்துக்கு நன்றி: பசுபதியை நேரில் பார்க்கும்போது பிரம்மிப்பாக இருந்தது. ஆனால் அவர் என்னை ரொம்பவே கம்ஃபோர்ட்டாக பார்த்துக்கொண்டார். நிறைய கற்றுக்கொடுத்தார். அவர் ஒரு பெரிய லெஜண்ட். இந்தப் படத்தில் அவர் எனக்கு அப்பாவாக நடித்ததற்கு நன்றி. ரஞ்சித் சார் எப்படி என்னை நம்பினார் என தெரியவில்லை. ஆனால் எனக்காக இப்படி ஒரு படம் கொடுத்ததற்காக நன்றி.
அமீர் எனக்கு இன்ஸ்பிரேஷன்: நான் படம் பார்த்த பிறகு அமீரின் ரோல் எனக்கு பிடித்துவிட்டது. எனக்கு அவர் பெரிய இன்ஸ்பிரேஷன். சர்வதேச கபடி போட்டீல் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு இந்த நேரத்தில் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன். சினிமாவுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் படத்தின் மூலம் கற்றுக்கொண்டேன். என்னுடைய 27 வயது வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டதைவிடவும், இந்தப் படத்துக்காக செலவழித்த காலத்தில்தன் நிறைய கற்றுக்கொண்டேன். அதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது" என்றார்.


Click it and Unblock the Notifications











