Bison - துருவ் விக்ரம திருப்பி தரமாட்டோம்.. மக்கள் மனதில் உட்கார்ந்துட்டார்.. தியேட்டரில் பைசன் ரெஸ்பான்ஸ் செம
சென்னை: துருவ் விக்ரமுக்கு பைசன் திரைப்படம் பெரிய வெற்றியையும், நிம்மதியையும் கொடுத்திருக்கிறது. அவர் நடித்த முதல் இரண்டு படங்களும் பெரிய ஹிட்டாகவில்லை; இந்தப் படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. வசூலிலும் நாளுக்கு நாள் முன்னேறி செல்கிறது. இந்நிலையில் தியேட்டரில் துருவ் விக்ரமுக்கு பயங்கரமாக ரெஸ்பான்ஸ் கிடைத்துவருகிறது. அவரை தங்கள் வீட்டு பிள்ளையாகவே ரசிகர்கள் பார்க்க தொடங்கிவிட்டார்கள்.
'பைசன் படம்தான் எனது முதல் படம். மாரி செல்வராஜுக்காக இரண்டு வருடங்கள் இல்லை; இருபது வருடங்கள்கூட காத்திருப்பேன்'.. பைசன் படத்தின் ப்ரோமோஷனில் விக்ரமின் மகன் துருவ் பேசிய வார்த்தைகள் இவை. நடித்த முதல் இரண்டு படங்களுமே பெரிய அடையாளத்தை அவருக்கு கொடுக்கவில்லை. அடுத்ததாக உச்சக்கட்ட நம்பிக்கையோடு இந்தப் படத்தில் கமிட்டாகியிருந்தார் அவர்.
படம் மெகா ஹிட்: மாரி செல்வராஜ் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்பது அனைவருமே அறிந்ததுதான். அவர் பட்டறைக்குள் துருவ் விக்ரம் சென்றிருந்ததால் கண்டிப்பாக பட்டை தீட்டப்பட்ட தங்கமாகத்தான் வெளியே வருவார் என திரைத்துறையினரும் ரசிகர்களும் நம்பியிருந்தார்கள். அந்த நம்பிக்கை வீண் போகாதபடி கதை, திரைக்கதையை அமைத்து துருவ்வை வெற்றி துருவத்தில் தூக்கி வைத்துவிட்டார் மாரி செல்வராஜ்.

அசாத்திய உழைப்பு: படத்தின் ஒவ்வொரு சீனிலும் துருவ் விக்ரமின் உழைப்பு பிரமிக்க வைத்தது. ஒரு பயிற்சியை தொடர்ந்து இரண்டு வருடம் தொடர்ந்து எடுப்பது என்பது அவ்வளவு சாதாரணம் இல்லை. அப்படி எடுப்பதற்கு பெரிய மன திடமும், ஒருங்கிணைந்த எண்ணமும் தேவை. அது துருவ்வுக்கு இருந்ததால்தான் மணத்தி கணேசனிடம் தொடர்ந்து பயிற்சி பெற்று; அதனை திரைப்படத்தை சரியான முறையில் வெளி காண்பித்து பாராட்டு மழையில் நனைந்துவருகிறார்.
ஒரு நாயகன் உதயமாகிறான்: கபடி விளையாடும் சீன்களில் மட்டுமின்றி ஆக்ஷன், எமோஷன் எந்த சீனிலும் துருவ் சிக்சர்தான் அடித்திருக்கிறார். மாரி செல்வராஜ் தனக்கு நினைத்ததை நடிகர்களிடமிருந்து வாங்கும்வரை ஓயவே மாட்டார். அவரிடம் பணியாற்றுவதற்கு பெரிய பொறுமை வேண்டும் என்று பணியாற்றியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த பொறுமையும் துருவ்வுக்கு இருந்திருக்கிறது. முக்கியமாக தனது தந்தை வழியில் தானும் நல்ல நடிகனாக வருவேன் என்று சொல்லியிருக்கிறார் துருவ்.
திருப்பி தரமாட்டோம்: இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம், பைசன் படத்தில் நடத்தில் பிடி வாத்தியார் கேரக்டரில் நடித்த மதன் உள்ளிட்டோர் தியேட்டரில் ஒன்றாக பைசன் படத்தை பார்த்தார்கள். படம் முடிந்த பிறகு ரசிகர்களிடம் பேசிய மதன், 'துருவ்வை உள்ளே விட்டால் கொஞ்சுவீர்களா' என கேட்க; அதற்கு ரசிகர்களோ, 'அவரை உள்ளே விட்டால் திருப்பி தரமாட்டோம்' என காதலோடு கூறினார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மனதில் துருவ் இடம்பிடித்திருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் ஷேர் செய்யப்பட்டுவருகிறது.


Click it and Unblock the Notifications











