»   »  கவுதமுடன் பிரச்சனை, துருவ நட்சத்திரம் படம் டிராப்பா?: விக்ரம் விளக்கம்

கவுதமுடன் பிரச்சனை, துருவ நட்சத்திரம் படம் டிராப்பா?: விக்ரம் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வரும் விக்ரமுக்கும், இயக்குனர் கவுதம் மேனனுக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விக்ரம் விளக்கம் அளித்துள்ளார்.

கவுதம் மேனன் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இது தவிர விஜய் சந்தரின் பெயர் வைக்காத படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Dhruva Natchathiram dropped?: Explains Vikram

இந்நிலையில் கவுதமுக்கும், விக்ரமுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு படம் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது என்றும், விக்ரம் கெட்டப்பை மாற்றி விஜய் சந்தர் படத்திற்கு சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டது.

கவுதமுக்கும் தனக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும், பிப்ரவரி 25ம் தேதிக்கு பிறகு துருவ நட்சத்திரம் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ளப் போவதாகவும் விக்ரம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் துருவ நட்சத்திரம் படம் கைவிடப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

English summary
Vikram has explained that there is nothing wrong between him and Gautham Menon and Dhruva Natchathiram is not dropped as rumoured.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil