கையில் Gun உடன் பணக்குவியல் மீது போஸ்.... திடீரென துருவ் விக்ரம் போட்ட போஸ்ட்
சென்னை : தரை முழுவதும் சிதறி கிடக்கும் ரூபாய் நோட்டுக்கள், தங்கக்கட்டிகள்....அதன் மீது கையில் துப்பாக்கியுடன் தலையை குனிந்தபடி அமர்ந்திருக்கும் நபர் இருக்கும் போட்டோ ஒன்றை விக்ரமின் மகன் துருவ் விக்ரம் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து, என்ன போட்டோ இது என அனைவரும் குழம்பிப் போய் உள்ளனர்.
Recommended Video
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் ஹீரோ ஆனார். முதல் படத்திலேயே அப்பாவையே மிஞ்சும் அளவிற்கு நடிப்பில் பின்னி பெடலெடுத்து அனைவரிடமும் பாராட்டை பெற்று விட்டார். இதைத் தொடர்ந்து முதல் முறையாக தனது தந்தை விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு பின் விக்ரம் படம்
டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் சிவன் இசையில், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியா பேனரில் உருவாக்கப்பட்டுள்ள மகான் படம். விக்ரமின் 60 வது படமாகும். 2019 ல் கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்த எந்த படமும் வெளிவரவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரவுள்ள விக்ரம் படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கேரக்டர் போஸ்டர்
மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் என வரிசையாக விக்ரம் படங்கள் ரிலீசிற்காக காத்திருந்தாலும் மகான் படம், தந்தை - மகன் காம்போவில் உருவாகும் முதல் படம் என்பதால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக மாறி உள்ளது. இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத், தீபக் பரமேஸ்வர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் கேரக்டர்களின் பெயர்கள் அடங்கிய போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.

துருவ் வெளியிட்ட ஷாக் போஸ்ட்
மகான் படம் பிப்ரவரி 10ம் தேதி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை விக்ரம் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கையில், இன்று துருவ் வெளியிட்டுள்ள போட்டோ அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. துருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அறை முழுவதும் ரூபாய் நோட்டுக்கள் சிதறி, குவிந்து கிடக்க, ஒரு புறம் தங்கக்கட்டிகள், மற்றொரு புறம் பெரிய துப்பாக்கி உள்ளது. இதற்கு நடுவே, ரூபாய் நோட்டுக்கள் மீது, கோட்-சூட் போட்ட நபர் ஒருவர் தலையை குனிந்தபடி, கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கும் போட்டோவை தான் துருவ் பகிர்ந்துள்ளார்.

அட இது தான் காரணமா
இந்த போட்டோ ஷாக் கொடுத்தாலும், அதோடு துருவ் பதிவிட்டுள்ள தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது. அது வேறு ஒன்றுமில்லை. மகான் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் நாளை வெளியாக உள்ளதாம். இந்த தகவலை தான் துருவ் இப்படி மாஸாக பகிர்ந்துள்ளார். இதை பார்த்து விட்டு விக்ரம் ரசிகர்கள் ஹாட் எமோஜிக்களால் கமெண்ட் செய்துள்ளனர். தாங்கள் ஆவலாக காத்திருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











