இட்லி கடை வசூலை காலி பண்ணுமா டியூட்.. தீபாவளி வின்னர் பிரதீப் ரங்கநாதன்.. அதர் ஸ்டேட்ஸிலும் கில்லி!

சென்னை: கோலிவுட்டின் எதிர்கால சூப்பர் ஸ்டாராகவே பிரதீப் ரங்கநாதன் மாறிவிடுவார் என ரசிகர்கள் டியூட் படத்தை தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை அள்ளினாலும், கமர்ஷியல் மற்றும் கருத்து சொல்லும் படமாக உருவாகியுள்ள டியூட் படத்தை பிரதீப் ரங்கநாதனுக்காகவே பார்க்க கொட்டும் மழையிலும் ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி படையெடுத்து வருவதே டியூட் படத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி என்கின்றனர்.

இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான படங்களில் மற்ற படங்களை விட அதிக அளவில் டியூட் படம் முதல் நாளே பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியுள்ளது.

Did Dude beat Dhanush s Idly Kadai Box Office within a week
Photo Credit:

இந்நிலையில், தீபாவளி விடுமுறை வரும் செவ்வாய்க்கிழமை வரை உள்ள நிலையில், டியூட் திரைப்படம் இட்லி கடை படத்தின் லைஃப் டைம் வசூலை முறியடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே லாபம்: 27 கோடி பட்ஜெட்டில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்த டியூட் திரைப்படம் முதல் நாளே தமிழ்நாட்டில் 6.7 கோடி ரூபாயும் டோலிவுட்டில் 3.3 கோடி ரூபாயும் என வசூல் செய்து 10 கோடிக்கும் அதிக வசூலை அள்ளியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பாகவே டேபிள் ப்ராஃபிட் 35 கோடி ரூபாய் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்தது. தமிழ்நாட்டில் டியூட் படத்தை வாங்கி வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்கின்றனர்.

Did Dude beat Dhanush s Idly Kadai Box Office within a week
Photo Credit:

இட்லி கடை வசூல் இதுவரை: தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க இன்பன் உதயநிதி தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்தார். ஆனால், எதிர்பார்த்த வெற்றியை அந்த படம் பெறவில்லை என்கின்றனர். அக்டோபர் 1ம் தேதி வெளியான இட்லி கடை திரைப்படம் 16 நாட்களில் 58.70 கோடி வசூல் மட்டுமே ஈட்டியிருப்பதாக சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது. உலகளவில் இட்லி கடை படம் 70 கோடி வரை வசூல் வந்திருக்கும் என்கின்றனர்.

இட்லி கடையை முந்துமா?: பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்களான லவ் டுடே 100 கோடி வசூலையும் டிராகன் 150 கோடி வசூலையும் உலகளவில் அள்ளிய நிலையில், அதே அளவு வசூலை டியூட் திரைப்படம் பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமின்றி டியூட் திரைப்படம் ஆந்திரா, தெலங்கானா, கேரளாவில் மிகச் சிறப்பான டிக்கெட் புக்கிங் நடைபெற்று வரும் நிலையில், வசூலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மமிதா பைஜுவுக்கு கேரளாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பிரதீப் ரங்கநாதனுக்கு டோலிவுட்டிலும் ரசிகர்கள் வட்டம் அதிகரித்து விட்டது. முதல் நாளில் 10 கோடி வசூலை அள்ளிய டியூட் கலவையான விமர்சனங்களுக்குப் பிறகும் குறைவதாக தெரியவில்லை. வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் என தொடர்ந்து 5 நாட்கள் இதே போல 10 கோடி பிளஸ் வசூலை அள்ளினால் அசால்ட்டாக தீபாவளி விடுமுறைக்குள் இட்லி கடையை டியூட் காலி பண்ணிவிடும் என்கின்றனர். தீபாவளி வரை தான் படம் ஓடும் என்றும் அதன் பின்னர் பெரிதாக வசூல் வராது என்றும் 100 கோடி எல்லாம் கஷ்டம் தான் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X