»   »  ஆமீர் கான் கேட்டும் வாய்ஸ் கொடுக்க மறுத்தாரா ரஜினிகாந்த்?

ஆமீர் கான் கேட்டும் வாய்ஸ் கொடுக்க மறுத்தாரா ரஜினிகாந்த்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆமீர் கானின் தங்கல் படத்திற்கு வாய்ஸ் கொடுக்க மறுத்துவிட்டாராம் ரஜினிகாந்த்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கான் மல்யுத்த வீரராக நடித்துள்ள படம் தங்கல். கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இந்த படத்தில் ஆமீருக்கு 3 மகள்கள். மூன்று பேருமே தந்தையை போன்றே மல்யுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

இந்த படத்திற்காக ஆமீர் கடினமாக உழைத்துள்ளார்.

உடல் எடை

உடல் எடை

வயதான தந்தை கதாபாத்திரத்திற்காக ஆமீர் தனது உடல் எடையை கூட்டினார். இதனால் அவரால் குனிய முடியவில்லை, நிமிர முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டார்.

ஜிம் பாடி

ஜிம் பாடி

படத்திற்காக குண்டான ஆமீர் அனைவரும் அதிசயிக்கும் வகையில் தனது உடல் எடையை குறைத்து ஜிம்பாடியாகிவிட்டார். அப்படி இருந்த ஆமீரா இப்படி ஆகிவிட்டார் என்று வியக்கச் செய்தார்.

ரஜினி

ரஜினி

ஆமீர் கான் தனது தங்கல் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக ஸ்பெஷலாக போட்டுக் காட்டியுள்ளார். படம் ரஜினிக்கு மிகவும் பிடித்து ஆமீரை பாராட்டியுள்ளார்.

முடியாது

முடியாது

தங்கல் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழில் தனது கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசுமாறு ஆமீர் ரஜினியிடம் அன்பு கோரிக்கை வைக்க அவர் அதை ஏற்க மறுத்துவிட்டாராம்.

English summary
Aamir Khan starrer Dangal is all set to hit the theatres during Christmas 2016 and the actor held a special screening for none other than superstar Rajinikanth, who sources say was moved by watching the film. Now Aamir Khan's Dangal will also be released in Tamil and it is reported that Aamir had asked Rajinikanth to do the voice dubbing in Tamil for his character and the superstar politely turned down the offer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil