ஒரு படத்திற்கு அஜித் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
சென்னை : இந்திய அளவில் பலருக்கும் பிடித்த ஃபேவரைட் நடிகராக இருக்கக் கூடியவர்களில் ஒருவர் அஜித். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சினிமா மட்டுமின்றி இவரது பைக் ரேஸ், துப்பாக்கிச் சுடுதல் என பலவும் ஏராளமானவர்களை கவர்ந்த விஷயமாகும்.
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு ஹச்.வினோத், போனி கபூர், அஜித் ஆகியோர் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து, உருவாகி உள்ள படம் வலிமை. இரண்டு ஆண்டு கால தாமதத்திற்கு பிறகு சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்தது.

பொங்கல் ரிலீஸ்
அஜித் நடித்துள்ள வலிமை படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். ரிலீஸ் தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் ஜனவரி 12 ம் தேதி வலிமை படம் ரிலீசாக உள்ளதாக பல தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது.

இனி தல வேண்டாம்
வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள் ப்ரோமோ இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. செகண்ட் சிங்கிள் டிசம்பர் 5 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கையில், இனி தன்னை யாரும் தல என அழைக்க வேண்டாம். தனது பெயருடன் எந்த அடைமொழியும் குறிப்பிட வேண்டாம் என ரசிகர்கள் மற்றும் ஊடகங்களை அஜித் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெயர் மட்டும் போதும்
இனி தன்னை குறிப்பிடும் போது அஜித், அஜித்குமார் அல்லது ஏகே என்று மட்டும் குறிப்பிட்டால் போதும் என அஜித், அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். இதை அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தாலும், அஜித்தின் இந்த செயலை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் பாராட்டி, வரவேற்று வருகின்றனர்.

அஜித்தின் சம்பளம்
இந்நிலையில் அஜித் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், அஜித் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் தான். உச்ச நடிகர் என்பதால் அவர் பல கோடிகளில் தான் சம்பளம் வாங்குவார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இத்தனை கோடிகளா
ஆனால் தென்னிந்திய நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் ஒரு படத்திற்கு ரூ.55 கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம். தற்போது நடித்து முடித்துள்ள வலிமை படத்திற்கும் அஜித், இதே தொகையை தான் சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











