பாலிவுட் ஹீரோக்களை அதிர வைத்த பிரபாஸின் சம்பளம்...எத்தனை கோடி தெரியுமா ?

ஐதராபாத் : பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் உலகம் அளவில் ஃபேமசான நடிகராகி விட்டார். அவருக்கு பெண் ரசிகைகளின் எண்ணிக்கையும் பாகுபலி படத்திற்கு பிறகே அதிகரித்தது.

பாகுபலி படம் பிரபாசிற்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்திருந்தாலும், அதுற்கு பிறகு அவர் நடித்த சாகோ படம் தோல்வி படமாகவே அமைந்தது. இருந்தாலும் அவர் மீதான எதிர்பார்ப்பு குறையவில்லை. பான் இந்தியன் நடிகராக மாறி உள்ள பிரபாஸ் அதிக படங்களில் கமிட் ஆவது கிடையாது.

ராமராக பிரபாஸ்

ராமராக பிரபாஸ்

இருந்தாலும் பிரபாஸ் நடித்து வரும் ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் போன்ற படங்கள் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. அதிலும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமர் ரோலில் நடித்து வருகிறார். மீண்டும் ஒரு சரித்திர படத்தில் அவர் நடிப்பதாலும் பிரம்மாண்ட பட்ஜெட் படம் என்பதாலும் இந்த படம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

டாப் ஹீரோக்கள் சம்பளம்

டாப் ஹீரோக்கள் சம்பளம்

லேட்டஸ்டாக வெளியாகி உள்ள தகவலின் படி, ஆதிபுருஷ் படத்திற்காக பிரபாஸ் வாங்கி உள்ள சம்பளம் பாலிவுட்டின் டாப் ஹீரோக்களையே அதிர வைத்துள்ளதாம். பாலிவுட்டின் டாப் ஹீரோக்களாக இருக்கும் அமீர் கான், சல்மான் கான், ஷாருக்கான், அக்ஷய் குமார் போன்ற நடிகர்கள் ஒரு படத்திற்கு ரூ.150 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்கள்.

இத்தனை கோடியா

இத்தனை கோடியா

பல ஹிட் படங்களை கொடுத்த பிறகே இவர்களின் சம்பளம் இவ்வளவு உயர்ந்துள்ளது. சல்மான் கான் சுல்தான் மற்றும் டைகர் ஜிந்தா ஹைய் ஆகிய படங்களுக்கும், அக்ஷய் குமார் பெல் பாட்டம் படத்திற்காகவும் 150 கோடி சம்பளம் வாங்கினர். ஆனால் பாகுபலி படம் தாறுமாறாக ஹிட் அடித்ததால், மீண்டும் சரித்திர படமான ஆதிபுஷ் படத்தில் நடிக்க பிரபாஸ் ரூ.150 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம்.

போட்டி போடும் டைரக்டர்கள்

போட்டி போடும் டைரக்டர்கள்

டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் பிரபாசை வைத்தை மெகா பட்ஜெட் படங்களை தயாரிக்க போட்டி போட்டி வருகிறார்கள். தங்களில் ஒருவராக பிரபாசை ரசிகர்கள் பார்ப்பதால் அவரது படங்கள் அதிகம் ரசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல பிரபாஸ் மிக சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதால் அவரின் படங்களின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் உள்ளதாம்.

ஏன் பிரபாசிற்கு மவுசு

ஏன் பிரபாசிற்கு மவுசு

பாகுபலி படத்தில் நடிப்பதற்காக மட்டும் பிரபாஸ் 5 ஆண்டுகளை செலவிட்டார். அந்த சமயத்தில் வேறு எந்த படத்திலும் அவர் கமிட் ஆகவில்லை. சாகோ படத்தில் வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார்.

தற்போது நடிக்கும் படங்கள்

தற்போது நடிக்கும் படங்கள்

ஓம் ராவத் இயக்கும் ஆதிபுருஷ் படத்தில் சைஃப் அலி கான், கிருத்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர். சைஃப் அலி கான், ராவணன் ரோலில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பூஜா ஹெக்டேவுடன் ராதே ஷ்யாம், தீபிகா படுகோனுடன் பாலிவுட் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X