Don't Miss!
- News
நான் கிரிக்கெட் வீரர்! பவுலர்களை பார்த்து பயந்தால் வேலைக்கு ஆகுமா! அமமுக வேட்பாளர் சிவபிரசாத் பளிச்!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
யாஷை ராக்கி பாயாக தெரியும்...ஆனால் இப்படி யாருக்காவது தெரியுமா ?
சென்னை : கேஜிஎஃப் படங்களுக்கு பிறகு இன்று இந்திய அளவில் கொண்டாடப்படும் நடிகராகி விட்டார் கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ். ஆனால் பலரும் அறியாத இன்னொரு முகம் யாஷிற்கு இருக்கிறது. யாஷின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தெரிந்தவர்கள், கேஜிஎஃப் யாஷின் நிஜ வாழ்க்கை கதை தானா என்று கூட கேட்டு வருகின்றனர்.
Recommended Video
கேஜிஎஃப் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கன்னடத்தில் டாப் நடிகராகி விட்டார் யாஷ். இதைத் தொடர்ந்து பான் இந்தியன் படமாக கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தை இயக்கி உள்ளார் டைரக்டர் பிரசாந்த் நீல். இந்த படம் உலக அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, கோடிக்கணக்கில் வசூலை அள்ளி குவித்து வருகிறது. வசூலில் இந்திய அளவில் புதிய வரலாறே படைக்க உள்ளது இந்த படம்.
’ஓ சொல்றியா மாமா’ தந்த யோகம்.. விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் ஜோடி போட்ட சமந்தா.. பூஜை போட்டாச்சு!

யாஷ் சொன்ன ஒரு வார்த்தை
கேஜிஎஃப் இரண்டு பாகங்களின் ப்ரொமோஷன்களின் போதும் யாஷின் பேச்சுக்களைக் கேட்ட பலரும், அட இப்படி ஒரு மனிதரா என ஆச்சரியப்பட்டுள்ளனர். கேஜிஎஃப் 2 ப்ரஸ்மீட்டில் கூட KGF 2 Vs Beast கிடையாது. KGF 2 and Beast என இவர் சொன்ன ஒரு வார்த்தையை இந்திய திரையுலகமே சபாஷ் போட்டு ஏற்றுக் கொண்டது. இதே ஆச்சரியம் அவரின் கடந்த கால வாழ்க்கையை அறிந்த அனைவருக்கும் ஏற்படுகிறது.

300 ரூபாயுடன் வெளியேறிய யாஷ்
யாஷின் அப்பா பஸ் டிரைவர். அம்மா ஹவுஸ் ஒயிஃப். ஆனால் யாஷிற்கோ தான் ஒரு நடிகராக வேண்டும் என்றும் இல்லாமல், சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசை. இதற்காக வெறும் 300 ரூபாய் பணத்துடன் வெளியேறி வந்தார் யாஷ். ஆரம்பத்தில் டிவி துணை நடிகராக நடிக்க துவங்கி, கிடைக்கும் வேடங்களில் எல்லாம் நடித்து இன்று தான் நினைத்தபடி சூப்பர் ஸ்டார் ஆகி விட்டார். இதை யாஷே பல முறை டிவி பேட்டிகளில் கூறி உள்ளார்.

யாஷின் சிறுவயது ஆசை
யாஷ் தனது பேட்டியில், நான் ஸ்கூல் படிக்கும் போது, நீ வளர்ந்த பிறகு யாரை போல் ஆக வேண்டும் என நினைக்கிறாய் என்று கேட்டார்கள். அப்போதே நான், சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என கூறினேன். நான் ஹீரோ ஆக போகிறேன் என சொன்ன போது அனைவரும் சிரித்தனர். ஆனால் ஒரு நாள் நான் பெரிய சினிமா ஹீரோ ஆவேன் என நான் நம்பினேன். அது எவ்வளவு கஷ்டம், எவ்வளவு அர்ப்பணிப்பு வேண்டும், எப்படி ஹீரோ ஆவது என எனக்கு எந்த ஐடியாவும் கிடையாது. எதுவும் தெரியாது. ஆனால் நடிகராக வேண்டும் என்று மட்டும் விரும்பினேன் என்றார்.

யாஷை வற்புறுத்திய பெற்றோர்
பள்ளி படிப்பை முடித்ததும் யாஷை காலேஜிற்கு போய் டிகிரி முடிக்க வேண்டும் என அவரின் பெற்றோர் வற்புறுத்தினர். ஆனால் அவரது மனமே நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டது. அதற்காக தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்த யாஷ், வீட்டிலிருந்து வெளியேறி தியேட்டர் குரூப் ஒன்றில் சேர்ந்தார். ஆனால் அவரின் குடும்பத்தினருக்கு அதில் விருப்பமில்லை.

யாஷை வற்புறுத்திய பெற்றோர்
பள்ளி படிப்பை முடித்ததும் யாஷை காலேஜிற்கு போய் டிகிரி முடிக்க வேண்டும் என அவரின் பெற்றோர் வற்புறுத்தினர். ஆனால் அவரது மனமே நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டது. அதற்காக தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்த யாஷ், வீட்டிலிருந்து வெளியேறி தியேட்டர் குரூப் ஒன்றில் சேர்ந்தார். ஆனால் அவரின் குடும்பத்தினருக்கு அதில் விருப்பமில்லை.

அது மட்டும் நடக்கவேயில்லை
நடிக்க போக வேண்டும் என்றதும் எனது பெற்றோர் என்னிடம் சொன்னது ஒன்றே ஒன்றை மட்டும் தான். சரி போ. ஆனால் உன்னால் முடியாவிட்டால். திரும்பி வந்து விடு. அதற்கு பிறகு நடிப்பை பற்றி நினைக்க கூடாது என்றார்கள். நானும், சரி. எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் என சொல்லி விட்டு சென்றேன். நான் திரும்பி வந்து விடுவேன் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவேயில்லை. நான் சந்தித்த ஒவ்வொருவரும் எனக்கு உதவினார்கள். எந்த ரோல் கிடைத்தாலும் நடித்தேன். வேறு நடிகர் யாராவது வராவிட்டால், உடல்நிலை சரியில்லாமல் போனால் என கிடைக்கும் வாய்ப்பு அத்தனையையும் பயன்படுத்திக் கொண்டேன். இப்படி தான் எனது நடிப்பு பயணம் துவங்கியது என்றார்.

என்ன மனுஷன்ய்யா இவரு?
ஆரம்பத்தில் சிறிய ரோல்களில் நடித்த யாஷ் இன்று சாதாரண நடிகர் மட்டுமல்ல. அவர் ஆசைபட்டது போல் சூப்பர் ஸ்டார். பான் இந்திய நடிகராகி உள்ளார். வெறும் 300 ரூபாயுடன் வீட்டை விட்டு வந்து, தனது நடிப்பு பயணத்தை துவங்கிய யாஷின் படங்கள் இன்று 100 கோடி, 1000 கோடி என வசூல் செய்து கொண்டிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு உதாரணமாக இருக்கும் யாஷை பலருக்கும் பிடிக்க இதுவும் ஒரு காரணம்.