வீடியோ கால் போட்டு பேசிய விஜய்...அப்படி யாருக்கு கால் பண்ணிருக்கார் தெரியுமா ?
சென்னை : விஜய் வீடியோ காலில் பேசிய போட்டோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. அதுவும் தளபதி 66 பட லுக்கில் விஜய் இருப்பதால் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள்.
விஜய் தற்போது தளபதி 66 பட ஷுட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். வம்சி பைடபள்ளி, தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கும் தளபதி 66 படம் ஏப்ரல் 6 ம் தேதி பூஜையுடன் துவங்கப்பட்டது. முதல்கட்டமாக சென்னையில் ஒரு பாடல் காட்சிகளை எடுத்து விட்டு, தற்போது ஐதராபாத்தில் ஷுட்டிங்கை தொடர்ந்து வருகிறார்கள்.

மூன்றாம் கட்ட ஷுட்டிங்
ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் இரண்டாம் கட்ட ஷுட்டிங்கை முடித்து மூன்றாம் கட்ட ஷுட்டிங்கை துவக்கி விட்டனர். இந்த ஷுட்டிங்கில் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, யோகிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். நேற்று முதல் மூன்றாம் கட்ட ஷுட்டிங் துவங்கி, இரவு நேர ஷுட்டிங்காக நடத்தப்பட்டு வருகிறது.

விஜய்யின் புதிய லுக் இதுதான்
இந்நிலையில் விஜய், தளபதி 66 செட்டில் இருந்த படி வீடியோ காலில் பேசி உள்ளார். இந்த காட்சியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர விட்டுள்ளனர். விஜய், தளபதி 66 படத்திற்காக இளமையான லுக்கிற்கு மாறி இருப்பதால் அனைவரும் ஆச்சரியமாக பார்த்து இந்த போட்டோவை பகிர்ந்து வருகின்றனர்.

டிரெண்டிங்கில் கலக்கும் போட்டோ
விஜய்யின் இந்த ஸ்மார்ட்டான, இளமையான லுக்கின் போட்டோ வெளியானதால் #Thalapathy66 ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கினர். தொடர்ந்து இந்த ஹேஷ்டேக்கில் விஜய் ரசிகர்கள், விஜய்யின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் லுக் போட்டோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். முதலில் விஜய் தனது நண்பர்களுடன் தான் வீடியோ காலில் பேசி உள்ளார் என கூறப்பட்டது.

யாருக்கு வீடியோ கால் போட்டார்
அதே சமயம், விஜய் யாருடன் வீடியோ காலில் பேசினார் என்ற சந்தேகத்தை பலரும் கிளப்பி உள்ளனர். விஜய் வீடியோ காலில் பேசியதால் தான் தளபதி 66 பட லுக் வெளியில் கசிந்துள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது பற்றி விசாரித்த போது, விஜய் வீடியோ காலில் பேசியது வேறு யாருடனும் இல்லையாம். தளபதி 66 பட ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவுடன் தானாம். இருவரும் வீடியோ காலில் பேசிய போட்டோவும் தற்போது வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











