»   »  என்னை பார்த்தா அப்படி தெரியுதா, என் பொண்ணை பார்த்தா இப்படி தெரியுதா: நடிகர் கோபம்

என்னை பார்த்தா அப்படி தெரியுதா, என் பொண்ணை பார்த்தா இப்படி தெரியுதா: நடிகர் கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தன்னை பற்றியும், தனது குடும்பத்தை பற்றியும் வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலையாள நடிகர் திலீப் எச்சரித்துள்ளார்.

மலையாள நடிகர் திலீப் தனது மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த பிறகு நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார். மஞ்சுவின் மகள் மீனாட்சி தனது தந்தை திலீப்புடன் தான் உள்ளார்.

இந்நிலையில் மீனாட்சிக்கும், காவ்யாவுக்கும் இடையே பிரச்சனை என்று செய்திகள் வெளியாகின.

மீனாட்சி

மீனாட்சி

மீனாட்சிக்கு காவ்யா மாதவனை சுத்தமாக பிடிக்கவில்லை. தினமும் இருவருக்கும் இடையே சண்டையாக உள்ளது. இதனால் திலீப் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார் என்று கூறப்பட்டது.

ஹாஸ்டல்

ஹாஸ்டல்

காவ்யா மாதவன் தொல்லை தாங்க முடியாமல் மீனாட்சி பள்ளி விடுதியில் சேர்ந்துவிட்டதாகவும் அடுத்ததாக தனது தாயிடமே திரும்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூட மலையாள திரையுலகில் பேச்சு அடிபட்டது.

திலீப்

திலீப்

திலீப் தனது மனைவி காவ்யாவுடன் அமெரிக்காவில் மேடை நிகழ்ச்சி நடத்தினார். அதற்கு அவர்கள் மீனாட்சியை அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

புகைப்படம்

புகைப்படம்

அமெரிக்காவில் காவ்யா மாதவனும், மீனாட்சியும் சேர்ந்து எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. அவர்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்று திலீப் தெரிவித்துள்ளார்.

வழக்கு

வழக்கு

தன்னை பற்றியும், தனது குடும்பத்தை பற்றியும் வதந்தி பரப்புவோர் மற்றும் சமூக வலைதளங்களில் பொய் தகவலை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திலீப் எச்சரித்துள்ளார்.

English summary
Dileep threatens to sue gossip mongers Malayalam actor Dileep has threatened to sue gossip mongers who spread wrong information about his daughter and second wife Kavya Madhavan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil