»   »  சென்னை தத்தளிக்கையில் எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவை இல்லை: பழம்பெரும் நடிகர் திலீப் குமார்

சென்னை தத்தளிக்கையில் எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவை இல்லை: பழம்பெரும் நடிகர் திலீப் குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சென்னை வெள்ளத்தில் சிக்கி பட்டபாடை நினைத்து கவலையில் இருப்பதால் பாலிவுட் நடிகர் திலீப் குமார் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளார்.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் வரும் 11ம் தேதி தனது 93வது பிறந்தநாளை கொண்டாட வேண்டியது. பாகிஸ்தானில் பிறந்து மும்பையில் செட்டிலான அவருக்கு சென்னை என்றால் மிகவும் பிடிக்கும்.

Dilip Kumar to forgo birthday celebrations for Chennai

தனது இரண்டாவது இல்லமாக சென்னையை ஆக்க வேண்டும் என்று அவர் கூறுவது உண்டு. அத்தகைய சென்னை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்துள்ள இந்த நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடப் போவது இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சென்னையில் பல உயிர்கள் பலியாகியுள்ளதை நினைத்து நான் கவலையில் உள்ளேன். அதனால் இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Legendary actor Dilip Kumar, who will turn 93 on Friday, says he won't celebrate his special day as he is saddened by thetragedy in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil