»   »  அட்டக்கத்திக்கு பிறகு ஒரு நாள் கூத்தில் தான் முதல்முறையாக..: தினேஷ்

அட்டக்கத்திக்கு பிறகு ஒரு நாள் கூத்தில் தான் முதல்முறையாக..: தினேஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்டக்கத்தி படத்திற்கு பிறகு தான் தலைமுடியை வாரி நடித்துள்ள படம் ஒரு நாள் கூத்து என்று தினேஷ் தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் ஜே. செல்வகுமார் தயாரிப்பில் அட்டக்கத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஒரு நாள் கூத்து. படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

Attakathi Dinesh

படத்தின் இசை வெளியீட்டு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. விழாவில் நாயகன் தினேஷ், நாயகிகள் மியா, நிவேதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மியா கேரளத்து பெண் என்றாலும் அழகான தமிழில் பேசினார்.

நிகழ்ச்சியில் தினேஷ் பேசுகையில்,

இது என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான டைம். ஏன் என்றால் எல்லாமே செம பாசிட்டிவாக போய்க் கொண்டிருக்கிறது. கூட பக்கத்திலேயே இருந்து பார்க்கையில் செம வைபாக உள்ளது. எப்பவுமே லவ் செமயா ஒர்க் அவுட்டாகும் என்பதை நான் என் கண் முன்பே பார்த்துக்கிட்டு இருக்கேன்.

இந்த படத்தில் நிறைய லவ் இருக்கு. அதனால் இது நல்லா இருக்கும். இது யாரையும் ஏமாத்தாது. எனக்கு வரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. நான் தேர்வு செய்து நடிக்கவில்லை ஆனால் அதுவாக நடக்கிறது. அது மாதிரி தான் ஒரு நாள் கூத்தும்.

நெல்சன் நண்பராக அறிமுகமானார். படம் பண்ணலாமா என்று கேட்டார், நானும் சரி என்றேன். என்னை தாடி எல்லாம் ட்ரிம் செய்து வேறு மாதிரியான லுக்கில் காண்பித்திருப்பார். அட்டக்கத்திக்கு பிறகு முதல்முறையாக நான் முடியை வாரி நடித்த படம். ஜஸ்டின் பிரபாகரன் பாடியது சூப்பராக இருந்தது என்றார்.

English summary
Actor Dinesh told that he has combed his hair properly in Oru Naal Koothu after Attakathi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil