twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாரிசெல்வராஜ் & துருவ் விக்ரம் படத்தின் தலைப்பு இதுதான் !

    |

    சென்னை : நடிகர் துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது.

    கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக உள்ள இப்படத்திற்காக தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்ட கபடி வீரர்களிடம் துருவ் விக்ரம் பயிற்சி மேற்கொள்ள உள்ளார்.

    மேலும், இப்படத்திற்காக கெட்டப்பை மாற்றி, 8 மாத படப்பிடிப்பு என பெரும் திட்டத்துடன் படக்குழு தயாராகி வருகிறது.

    ரொம்ப புதுசா இருக்கே.. தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் அப்படியொரு பாடலா? லீக்கான தகவல்!ரொம்ப புதுசா இருக்கே.. தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் அப்படியொரு பாடலா? லீக்கான தகவல்!

    கர்ணன்

    கர்ணன்

    இயக்குனர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது. இப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அனைவரும் மொச்சும்படி இருந்தது. குறிப்பாக கர்ணன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த நட்டியை ரசிகர்கள் இணையத்தில் திட்டி தீர்த்துவிட்டனர். அந்த அளவுக்கு அவரின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

    நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம்

    நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம்

    ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிதாக ஐந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக, கடந்த 2019ஆம் ஆண்டு தகவல்கள் வெளியாகின. இதில் பரியேறும் பெருமாள், திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், மேற்கு தொடர்ச்சி மலை, திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி, மற்றும் அறிமுக இயக்குனர்கள் சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ் பிராங்க்ளின் ஆகிய ஐந்து இயக்குனர்களும் புதிதாக தயாரிக்க உள்ள ஐந்து திரைப்படங்களையும் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    கபடி வீரன்

    கபடி வீரன்

    மாரி செல்வராஜ் கர்ணன் படத்தைத் தொடர்ந்து, துருவ் விக்ரம்வை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது இதற்காக அவர் தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்ட கபடி வீரர்களிடம் பயிற்சி பெற்று வருவதாகவும் இந்த பயிற்சி 4 வாரங்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு கபடி வீரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கெட்டப் மாற்றம், 8 மாத படப்பிடிப்பு என பெரும் திட்டத்துடன் படக்குழு தயாராகி வருகிறது.

    உண்மை சம்பவம்

    உண்மை சம்பவம்

    தமிழகத்தின் கடற்கரை கிராமத்தில் கஷ்டப்பட்டு வளர்ந்து, தேசத்தின் உயரிய விளையாட்டு கவுரவத்தை வென்ற, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தேசத்துக்காக தங்கம் வென்ற ஒருவரின் உண்மைக் கதை இது எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கபடி விளையாட்டை மையமாக வைத்து சில படங்கள் வெளியாகி இருந்தாலும், இந்தப் படம் உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    Recommended Video

    Thanu Sirஇன் தியாகம் அதிகம் | Mari Selvaraj Talk | FILMIBEAT TAMIL
    ஏராளமான பெண் ரசிகைகள்

    ஏராளமான பெண் ரசிகைகள்

    தெலுங்குவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான திரைப்படம் தான் வர்மா. இத்திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் துருவ் விக்ரம். அறிமுகமான முதல் படத்திலேயே ஏராளமான இளம் ரசிகைகளின் மனதில் இடம் பிடித்தார் துருவ்.

    மற்றொரு இயக்குனருடன்

    மற்றொரு இயக்குனருடன்

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தந்தை விக்ரமுடன் இணைந்து நடிக்கும் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளார் துருவ் விக்ரம். இதற்கிடையே, மற்றொரு புதிய இயக்குநரிடம் கதை கேட்டுள்ள துருவ் விக்ரம், அதில் நடிப்பதும் உறுதியாகியுள்ளது.

    English summary
    Mari Selvaraj teaming up with Dhruv Vikram, son of actor Vikram, for his next.Dhruv essaying the role of a kabbadi player.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X