»   »  நீ நடிகனாகலாம்பா: விஷாலிடம் தெரிவித்த இயக்குனர் சுபாஷ்

நீ நடிகனாகலாம்பா: விஷாலிடம் தெரிவித்த இயக்குனர் சுபாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷால் ஒரு நடிகன் ஆகலாம் என்று அவரிடம் முதல் முதலாக கூறியவர் இயக்குனர் சுபாஷ். இந்த தகவலை விஷாலே தெரிவித்துள்ளார்.

சத்ரியன், ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சுபாஷ் உடல் நலக்குறைவால் நேற்று உயிர் இழந்தார். அவரது மரண செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Director Subash played an important role in Vishal's life

இந்நிலையில் சுபாஷ் பற்றி விஷால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இயக்குனர் சுபாஷ் மரணம் அடைந்தார். நான் நடிகன் ஆகலாம் என முதலில் கூறிய நபர். உங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன். உங்களின் கடைசி திரைக்கதையில் கார்த்தியுடன் பணியாற்றுவதில் பெருமை அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா விஷால் மற்றும் கார்த்தியை வைத்து இயக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்திற்கு சுபாஷ் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது தெரிகிறது.

English summary
Actor Vishal tweeted that "Dir #KSubash passed away.1st person who said I cn bcome an actor.cn neva 4get u. .proud to do ur last script wit Karthi."
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil