அஜித்தின் சூப்பர்ஹிட் படங்களின் பார்ட் 2... இயக்க துடிக்கும் டைரக்டர்கள்
சென்னை : அஜித் கடந்த 2 ஆண்டுகளாக நடித்து வரும் வலிமை படம் எப்போது ரிலீசாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சமயத்தில் அந்த ஆவலை மேலும் தூண்டும் விதமாக அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருவதால் அஜித் ரசிகர்கள் படுகுஷியாகி உள்ளனர்.
வலிமை படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதால் ரிலீஸ் தேதியும் அரசல் புரசலாக வெளியாகி வருகிறது. வெற்றி தியேட்டர்ஸ் உரிமையாளர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் அக்டோபர் 14 ஆயுத பூஜைக்கு வலிமை ரிலீசாகும் என தெரிவித்துள்ளார்.

பில்லா 3 வருதா
அஜித்தை வைத்து பில்லா, பில்லா 2 படங்களை இயக்கிய டைரக்டர் விஷ்ணுவர்தனிடம் சமீபத்தில் பேட்டியின் போது, பில்லா 3 எடுப்பீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் சிரித்தபடியே, நீங்கள் அவசரப்படாமல் இருந்தால் எல்லாம் சரியான நேரத்தில், சரியாக நடக்கும் என பில்லா 3 இயக்கும் தனது பிளானை சூசகமாக சொன்னார்.

மங்காத்தா 2 வுமா
இந்நிலையில் டைரக்டர் வெங்கட் பிரபுவிடம் ட்விட்டரில் ரசிகர் ஒருவர், உடனடியாக இரண்டாம் பாகத்தை இயக்கினால் சரியாக இருக்கும் என்றால் எந்த படத்தை சொல்வீர்கள் என்றார். அதற்கு வெங்கட் பிரபு மங்காத்தா என பதிலளித்தார். வெங்கட் பிரபுவின் இந்த ட்வீட் செம வைரலாகி வருகிறது.

கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்
ஏற்கனவே 2021 ம் ஆண்டு துவங்கியது முதல் அதிகம் டிரெண்டிங் ஆக்கப்பட்ட ஹாஷ்டாக்குகள் என ட்விட்டர் வெளியிட்டுள்ள டாப் 10 பட்டியலில் அஜித்தின் வலிமை தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. டாப் 5 பட்டியலில் அஜித் பெயரும் இடம்பெற்றுள்ளது. அப்டேட் கேட்டே வலிமை படத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்து விட்டனர் அஜித் ரசிகர்கள். இப்போது வெங்கட் பிரபு வேறு மங்காத்தா 2 இயக்க போவதாக மறைமுகமாக சொல்லி விட்டார். இனி தல ரசிகர்களை கேட்கவா வேணும்.

அஜித்தின் 50 வது படம்
தமிழ் சினிமாவின் மிகப் பெரிய டைரக்டர்களில் ஒருவராக இருக்கும் வெங்கட் பிரபு, அஜித்தின் 50 வது படமான மங்காத்தாவை 2011 ல் இயக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. அஜித்தின் ஆக்ஷன், நடிப்பு ஆகியன பெரிய அளவில் பேசப்பட்டது. அர்ஜுன், பிரேம்ஜி, வைபவ், த்ரிஷா, ராய் லட்சுமி, மகத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

விரைவில் அறிவிப்பு
ஏற்கனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. தற்போது வெங்கட் பிரபுவின் இந்த ட்வீட்டால் விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தல 62 ம் சொல்லிட்டாங்க
ஆனால் அஜித் தற்போது தனது 60 வது படமான வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட ஷுட்டிங் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் தல 61 படத்தையும் போனி தயாரிப்பில் வினோத் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தல 62 படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video

வெங்கட் பிரபுவும் பிஸி
அதே சமயம் வெங்கட் பிரபுவும், சிம்புதேவன் இயக்கத்தில் தான் தயாரித்துள்ள கசட தபற படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 27 ம் தேதி ஓடிடி.,யில் ரிலீசாக உள்ளது. அதோடு சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படமும் வேலைகள் முடிந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது.

எப்போ அறிவிப்பு வரும்
இதனால் தற்போது வெங்கட் பிரபு, அஜித் இருவரும் கமிட் ஆகி இருக்கும் படங்கள் முடிந்த பிறகே மங்காத்தா 2, பில்லா 3 படங்கள் பற்றிய பேச்சுக்கள் துவங்கப்பட்டு, அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











