தீபாவளி வின்னர் யாரு?.. நேரடியாக மோதும் 3 இளஞ்சிங்கங்கள்.. பாக்ஸ் ஆபீஸை தட்டித் தூக்கப் போவது இவரா?
சென்னை: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை அக்டோபர் 20ம் தேதி வருகிறது. அதனை டார்கெட் செய்து தீபாவளி ரிலீஸ் படங்கள் வெள்ளிக்கிழமையான அக்டோபர் 17ம் தேதி படையெடுக்கின்றன. வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையை வேட்டையாடலாம் என்பதே புதிய படங்களின் திட்டம்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட எந்தவொரு முன்னணி நடிகர்கள் படங்களும் வெளியாகவில்லை. ஆயுத பூஜைக்கு வெளியான தனுஷின் இட்லி கடை படமும் பெரிதாக வசூல் வேட்டை நடத்த முடியாமல் திணறியது.

இந்நிலையில், இளம் நடிகர்களான துருவ் விக்ரம், பிரதீப் ரங்கநாதன் மற்றும் ஹரிஷ் கல்யாணின் படங்கள் தீபாவளி ரேஸில் களமிறங்கியுள்ளன.
ஹரிஷ் கல்யாணின் டீசல்: கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த படத்தைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் திரைப்படம் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகிறது. சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். க்ரூட் ஆயில் மாஃபியா குறித்து இந்த படத்தின் கதை இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், ஹரிஷ் கல்யாண் அளித்த பேட்டியில், இந்த தீபாவளிக்கு இளம் நடிகர்களான பிரதீப் ரங்கநாதன், துருவ் விக்ரம் படங்கள் வெளியாகின்றன. தனக்கு இது முதல் தீபாவளி ரிலீஸ். அனைவரது படங்களும் ஓடவேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்றார்.

பிரதீப் ரங்கநாதனின் டியூட்: டிராகன் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அக்டோபர் 17ம் தேதி கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள டியூட் படம் வெளியாகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்த எல்ஐகே படம் தீபாவளி ரேஸில் இருந்து விலகி டிசம்பர் 18ம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் நியு இயரை குறிவைத்து ரிலீஸாகிறது.

துருவ் விக்ரமின் பைசன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படமும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கபடி வீரரை பற்றிய படமாக பைசன் உருவாகி உள்ள நிலையில், 3 படங்களில் தீபாவளி வின்னர் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தீபாவளி வின்னர் யாரு?: இந்த 3 படங்களை தாண்டி நட்டி நட்ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராஜநாதன் இயக்கியுள்ள கம்பி கட்ன கதை படமும் வெளியாகிறது. 3 இளஞ் சிங்கங்களான ஹரிஷ் கல்யாண், பிரதீப் ரங்கநாதன், துருவ் விக்ரம் நடித்துள்ள படங்கள் வெளியாகவுள்ள நிலையில், தீபாவளி வின்னர் யாரு என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஹரிஷ் கல்யாண் பார்க்கிங், லப்பர் பந்து என தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் நிலையில், அவருடைய டீசல் படம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் படமும் தொடர்ந்து வெற்றிப் பெற்று வரும் நிலையில், டியூட் படத்துடன் ஹாட்ரிக் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை பெரிதாக வெற்றிப் பெறாத துருவ் விக்ரம் பைசன் படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார் என்பதால் அவருக்கும் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இப்போதைய சூழலில் பிரதீப் ரங்கநாதன் மற்ற இருவரையும் விட டாப்பில் உள்ளார். டியூட் டிரைலரும் பிரதீப் ரங்கநாதனை ஈஸியாக தீபாவளி வின்னராக மாற்றும் என்றே தெரிகிறது. அடுத்த வாரங்கள் படங்கள் வெளியான பிறகு மக்கள் யாருக்கு சப்போர்ட் செய்கிறார்கள் என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











