வலிமையா? அண்ணாத்தயா?.. மோதிக்கொள்ளும் ரஜினிகாந்த், அஜித்.. இதில் யார் முந்துவார்!

சென்னை: இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வலிமை திரைப்படம் அட்டகாசமாக உருவாகி வருகிறது.

Recommended Video

Valimai Update | Yuvan Shankar Raja Interview | U1 Records | Tamil Filmibeat

தொடர்ந்து கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்து வரும் சிறுத்தை சிவா இப்போது முதன்முறையாக ரஜினியுடன் இணைந்துள்ள அண்ணாத்த திரைப்படம் செம மாஸாக தயாராகிவருகிறது.

ஏற்கனவே அஜித் மற்றும் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் ஒன்றாக ரிலீசாகி வசூலில் நீயா நானா என கடும் போட்டியே நிலவிய நிலையில் இப்பொழுது அதே போகல அண்ணாத்தா மற்றும் வலிமை ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.

ஹிட்டுக்கு மேல் ஹிட்

ஹிட்டுக்கு மேல் ஹிட்

எந்த இயக்குனரிடமும் அஜித்குமார் தொடர்ந்து நான்கு படங்களில் பணியாற்றியது இல்லை ஆனால் சிறுத்தை சிவாவுடன் இணைந்து தொடர்ந்து நான்கு படங்களில் பணியாற்றிய ஹிட்டுகளை கொடுத்து உள்ளார். சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிவா அஜித்துடன் கூட்டணி அமைத்து வீரம் என்ற ஹிட் படத்தை கொடுத்தார். அதைத் தொடர்ந்து இக்கூட்டணி வேதாளம், விவேகம்,விஸ்வாசம் என ஹிட்டுக்கு மேல் ஹிட் கொடுத்தது.

அண்ணாத்த

அண்ணாத்த

இந்நிலையில் சிறுத்தை சிவா முதல் முறையாக ரஜினிகாந்துடன் கூட்டணி வைத்து அண்ணாத்த என்ற படத்தை இயக்கி வருகிறார். அனைத்து கட்ட படப்பிடிப்பு பணிகளும் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறு விறு வேகத்தில் நடைபெற்று கொண்டுள்ளது. இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா ஹீரோயின்களாக நடிக்க குஷ்பு மற்றும் மீனா முக்கிய வேடங்களில் தோன்ற உள்ளதால் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வரும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு என்பது ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு உள்ளது

வலிமை

வலிமை

சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் என்று போன்ற இரண்டே படங்களில் தமிழ் ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக மாறிய ஹெச் வினோத் தனது மேக்கிங் ஸ்டைல் மூலம் திரைத்துறையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அஜீத்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை என்ற சூப்பர் ஹிட் படத்தையும் கொடுத்திருந்தார். அதன் பிறகு அஜித், ஹெச் வினோத் கூட்டணி வலிமை படத்திலும் இணைய கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. போலீஸ் மற்றும் பைக் ரேஸராக அஜித் இந்த படத்தில் நடிப்பதால் எதிர்பார்ப்பு வேற லெவலில் உள்ளது.

யார் முந்துவார்

யார் முந்துவார்

இவ்வாறு பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் அண்ணாத்த மற்றும் வலிமை திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக புதிய தகவல் வந்துள்ளது. ஏற்கனவே 2019ஆம் ஆண்டு பேட்டை மற்றும் விஸ்வாசம் இரண்டும் ஒரே நாளில் வெளியாகி வசூலில் நீயா நானா என போட்டி போட்டுக் கொள்ளும் அளவிற்கு பாக்ஸ் ஆபீஸை இரண்டு திரைப்படங்களுமே தெறிக்க விட்டது. இப்பொழுது அதே சூழல் நிலவுகிறது. ஆம்,வரும் தீபாவளிக்கு அண்ணாத்த மற்றும் வலிமை ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது. எனவே இந்த முறை அண்ணாத்த மற்றும் வலிமை இதில் யார் முந்துவார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டை ஆட்டிப் படைத்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X