விஜய் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா...கேட்டா அசந்துடுவீங்க
சென்னை : தமிழ் சினிமாவின் டாப் மற்றும் வசூலை குவிக்கும் நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கும் விஜய், தனது முதல் படத்திற்காக வாங்கிய முதல் சம்பள தொகை எவ்வளவு என்ற தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைக்கும்.
நடிகர் விஜய் தனது அப்பாவும் பிரபல டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகரால் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாக வளர்ந்துள்ளார் விஜய்.

விஜய்க்காக வசூலான 200 கோடி
ரசிகர்கள், தமிழ் சினிமா மட்டுமின்றி பிற மொழி ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கும் பிடித்த தமிழ் ஹீரோவாக விஜய் தான் இருக்கிறார். இப்படி அனைவரின் மனம் கவர்ந்த விஜய் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் திரைக்கதை சொதப்பலாக இருந்ததாக கூறினாலும் விஜய் என்ற தனி மனிதனுக்காகவே அந்த படம் தொடர்ந்து ஓடி, 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக சொல்கிறார்கள்.

விஜய்க்கு கோடிகளில் சம்பளம்
பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி 66, தளபதி 67 என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி, நடித்து வருகிறார் விஜய். தற்போது விஜய் ஒரு படத்திற்கு 80 முதல் 90 கோடிகளை சம்பளமாக பெற்று வருகிறார். பீஸ்ட் படத்திற்காக முதலில் அவருக்கு 100 கோடி சம்பளம் பேசப்பட்டு, பிறகு கொரோனா கால பைனான்ஸ் நெருக்கடி காரணமாக 80 கோடிகள் சம்பளமாக கொடுக்கப்பட்டது. அடுத்து அவர் நடிக்கும் தளபதி 66 படத்திற்கு விஜய்க்கு 120 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் முதல் பட சம்பளம்
இன்று 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் விஜய், முதன் முதலில் அறிமகமான படம் 1984ல் ரிலீசான வெற்றி என்ற படம். பி.எஸ்.வீரப்பா இந்த படத்தை தயாரித்திருந்தார். அவரும் இந்த படத்தில் நடித்திருந்தார். தனது முதல் படமான வெற்றி படத்திற்காக விஜய்க்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 500 ரூபாய். அதற்கு பிறகு ரஜினியின் நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய் 1992 ம் ஆண்டு தனது 18 வது வயதில் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அட இதெல்லாம் தெரியாதே
தற்போதைய லேட்டஸ் டெக்னாலஜியில் மட்டுமல்ல இரண்டு பழைய விஷுவல் ஃபார்மேட் படங்களிலும் விஜய் நடித்துள்ளார். 80 களில் ஈஸ்ட்மேன் கலர் மற்றும் 90 களில் கலர் ஃபிலிம் படங்கள் என இரண்டிலும் நடித்துள்ளார். தற்போது நவீன தொழில்நுட்பம் பயன்படுத்திய படங்களிலும் நடித்து வருகிறார். விஜய்யின் முதல் சம்பளம் பற்றிய தகவலை வெளியிட்டது வேறு யாருமில்லை, அவரது தந்தை எஸ்ஏசி தான். அவர் அளித்த பழைய பேட்டி ஒன்றில் இதை குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











