அஜித் பைக் டூர் போனதுக்கு இது தான் காரணமா...இதை யாருமே யோசிக்கலையேப்பா

சென்னை : அஜித் பைக் டூர் போவதோ, சைக்கிளிங் போவதோ ஒன்றும் புதிதில்லை. பல வருடங்களாக அஜித் இதை செய்து கொண்டு தான் இருக்கிறார். இருந்தாலும் அவர் பெரிய ஸ்டார் என்பதாலும், மீடியாக்களில் பெரிதாக தலைகாட்டாதவர் என்பதாலும் அவரை பற்றிய தகவல்களை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

சாதாரணமாகவே அஜித்திற்கு என ஒரு மாஸ் இருக்கும். அது ஹெச்.வினோத் படங்களில் நடித்த பிறகு வேறு விதமாக அதிகரித்துள்ளது. வலிமை படத்தை பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்திருந்தது போல், தற்போது ஏகே 61 படம் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்துள்ளனர்.

இதுவரை மீடியாக்களில் வெளிவந்த தகவலும் உறுதியான தகவல்களா என்றும் யாருக்கும் தெரியாது. பலத்த பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருவதால் இதுவரை ஒரு போட்டோ கூட கசியவில்லை.

நரைத்த தாடியுடன் அஜித்

நரைத்த தாடியுடன் அஜித்

ஏகே 61 படத்தை தயாரிக்க போவதாக போனி கபூர் அறிவித்த சில நாட்களிலேயே அஜித், தனது வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு பதிலாக நரைத்த நீண்ட தாடி, காதில் சிறிய கம்மல் என டோட்டலாக வேறு லுக்கிற்கு மாறினார். என்ன அஜித் இப்படி மாறிவிட்டார். இந்த அளவிற்கா அஜித்திற்கு வயதாகி விட்டது என்று கூட பேசினார்கள்.

அஜித்தின் நெகடிவ் ரோல்

அஜித்தின் நெகடிவ் ரோல்

ஆனால் சிறிது நாட்களிலேயே ஏகே 61 அப்டேட் கேட்ட ரசிகர்களுக்காக நீண்ட தாடியுடன் இருக்கும் அஜித்தின் நெகடிவ் போட்டோவை வெளியிட்டார். இதனால் அஜித் வில்லன் ரோலில் நடிக்கிறார். இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என தகவல் பரவியது. பிறகு அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை. இரண்டு லுக்குகளில் நடிக்கிறார். ஹீரோவும் அவர் தான், வில்லனும் அவர் தான் என சொல்லி குழப்பினர். அப்படி படத்தோட கதை தான் என்ன என இப்போது வரை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

அவசரமாக கிளம்பி சென்ற அஜித்

அவசரமாக கிளம்பி சென்ற அஜித்

இதற்கிடையில் ஐதராபாத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஷுட்டிங்கை முடித்த அஜித், அடுத்த கட்ட ஷுட்டிங்கிற்காக புனே செல்ல போவதாக கூறப்பட்டது. ஏகே 61 ஷுட்டிங் ஜுலை - ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து விட்டு, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளையும் முடித்து, தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய போவதாக கூறப்பட்டது. அஜித் ஏர்போர்ட்டில், செல்ஃபி கேட்ட பெண்ணிடம் சாரி சொல்லி விட்டு, அவசரமாக நகர்ந்து சென்ற வீடியோ வெளியானதால். அவர் புனேவிற்கு தான் செல்கிறார் என அனைவரும் நினைத்தனர்.

இப்போ டூர் ரொம்ப முக்கியமா

இப்போ டூர் ரொம்ப முக்கியமா

ஆனால் படம் தீபாவளி ரிலீஸ் கிடையாது. டிசம்பர் - ஜனவரி மாதங்களில் தான் படத்தை ரிலீஸ் செய்ய போவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அஜித் புனே செல்லவில்லை. ஐரோப்பாவிற்கு பைக் டூர் கிளம்பி போய் விட்டார் என சொன்னார்கள். இந்த போட்டோக்கள் வெளியாகி டிரெண்டாகின. அதே சமயம், ஷுட்டிங்கில் கலந்த கொள்ளாமல் இப்படி டூர் போய் கொண்டிருக்கிறாரே. சீக்கிரம் ஷுட்டிங்கை முடித்தால், படமும் சீக்கிரம் ரிலீசாகுமில்லையா என பலர் கேள்வி கேட்டும், அஜித்தை விமர்சித்தும் வந்தனர்.

அஜித் ஏன் இப்படி செய்கிறார்

அஜித் ஏன் இப்படி செய்கிறார்

வழக்கமாக ஒரு படத்தின் வேலைகளை முடித்து கொடுத்து விட்டு தான் அஜித் பைக் டூர் போவார். ஆனால் தற்போது ஏகே 61 ஷுட்டிங்கை பாதியில் நிறுத்தி விட்டு போனதற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கிறதாம். அதாவது, தற்போது வரை அஜித் நீண்ட வெள்ளை தாடி, கூல் லென்ஸ், காதில் கம்மல் என்ற கெட்அப்பில் தான் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஏகே 61 கதைப்படி இது தான் வயதான காலேஜ் ப்ரொஃபசர் லுக்காம். இந்த லுக் ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரிந்து விட்டது.

டூர் போக இது தான் காரணமா

டூர் போக இது தான் காரணமா

இனி ஐரோப்பா டூர் முடித்து விட்டு வந்த பிறகு, ரகசியமாக வைத்திருக்கும் அந்த புதிய லுக்கிற்கு மாற போகிறாராம் அஜித். இது தான் படத்தில் மெச மாஸாக இருக்க போகிறதாம். இந்த புதிய லுக்குடன், புது விதமான க்ளைமாக்சில் நடிக்க போகிறாராம். இந்த லுக்கிற்கு மாறிய பிறகு, படத்தின் ஷுட்டிங்கை முடித்து விட்டு, பைக் டூர் போனால் அந்த போட்டோக்களால் புதிய லுக் அனைவருக்கும் தெரிந்து, சர்ப்ரைஸ் போய் விடும். அதனால் தான் புது லுக்கிற்கு மாறுவதற்கு முன்பே பைக் டூர் கிளம்பி போய் விட்டாராம்.

அட இதை யோசிக்கவேயில்லையே

அட இதை யோசிக்கவேயில்லையே

ஏற்கனவே கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து, இயற்கை முறையில் உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறார் அஜித். இந்த புதிய லுக்கில்,செம ஃபிட்டான, ஸ்மார்ட், ஹேண்ட்சம் லுக்கில் தான் க்ளைமாக்சில் வர போகிறாராம் அஜித். படத்தின் ரிலீஸ் அல்லது ஃபர்ஸ்ட்லுக் போன்றவைகள் ரிலீசான பிறகு தான் இந்த புதிய லுக்குடன் பொது இடங்களில் தோன்ற போகிறாராம். புதிய லுக் கசிந்து விடக் கூடாது என்பதற்காக தான் ஷுட்டிங்கை கூட ஐதராபாத், சென்னையில் நடத்தாமல், புனேவிற்கு ஷிப்ட் செய்தார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X