அட இவர் அவரது ரசிகரா?...உதயநிதி சொன்ன சுவாரஸ்ய தகவல்

சென்னை : சென்னையில் நடந்த பட ப்ரொமோஷன் விழாவில் தான் யாருடைய ஃபேன் என்பதை அவர் முன்னிலையிலேயே மற்றொரு டாப் ஹீரோ புகழ்ந்துள்ளது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. டாப் ஹீரோக்கள் பலர் சம கால ஹீரோக்கள் பலரை தனது ஃபேவரைட் என சொல்லி வருவது தற்போது அதிகரித்து வருவதை பலரும் வரவேற்று, பாராட்டி வருகின்றனர்.

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள பிரமாண்டமான படங்களில் ஒன்று ராதே ஷ்யாம், UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படம் மார்ச் 11 ம் தேதி தியேட்டர்களில் வெளியாக தயாராக உள்ளது.

 தள்ளி போன ராதே ஷ்யாம்

தள்ளி போன ராதே ஷ்யாம்

2022 ம் ஆண்டின் துவக்கத்திலேயே பல மெகா பட்ஜெட் படங்கள் வரிசையாக ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டன. ஜனவரி 7 ம் தேதி ஆர்ஆர்ஆர் படமும், அதைத் தொடர்ந்து ஜனவரி 13ல் ராதே ஷ்யாம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. அதிலும் ராதே ஷ்யாம் படம் 2021 ம் ஆண்டே ரிலீசாகும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக பெரிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டதால், இந்த ஆண்டு முதல் மெகா பட்ஜெட் படமாக அஜித்தின் வலிமை சமீபத்தில் ரிலீசானது.

 தீவிர ப்ரொமோஷன்

தீவிர ப்ரொமோஷன்

இதைத் தொடர்ந்து மற்ற படங்கள் ரிலீசாக தயாராகி வருகின்றன. வலிமையை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மார்ச் 10 ம் தேதி ரிலீசாக உள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்த நாளே பிரபாஸின் ராதே ஷ்யாம் ரிலீசாக உள்ளது. இதற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

பிரபலங்கள் இணைந்த நிகழ்வு

பிரபலங்கள் இணைந்த நிகழ்வு

இவ்விழாவினில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

என் படத்திற்கே நான் போகல

என் படத்திற்கே நான் போகல

தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி பேசுகையில், ராதே ஷியாம் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள், ரெட் ஜெயண்ட் மூவீஸ் ரிலீஸ் செய்த எப்.ஐ.ஆர் படத்தின் சக்சஸ் மீட்டிற்கே என்னால் வரமுடியவில்லை. என் படம் இன்று தான் ஆரம்பித்துள்ளது. கட் அடித்துவிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் 2 மாதம் முன்னாடியே பார்த்தேன். அப்போது 3 1/4 மணி நேரம் ஓடியது, படம் ஒவ்வொரு காட்சியும் டிரெய்லர் மாதிரியே பிரமாதமாக இருந்தது.

Recommended Video

'Beast பத்தி சொல்ல நிறைய இருக்கு' | Beast | Pooja Hegde | Filmibeat Tamil
நான் இவரோட ஃபேன்

நான் இவரோட ஃபேன்

ராதே ஷ்யாம் நன்றாக வந்துள்ளது. பிரபாஸ் ஃபேன் நான், பாகுபலிக்கு முன்னாடியே உங்களை பிடிக்கும். பூஜா இங்கு அரபிக்குத்து குத்தினார், இந்தப் படத்திலும் கலக்கியிருக்கிறார். சத்யராஜ் சார் ஒரு வித்தியாசமான ரோல் செய்துள்ளார். கடைசி காட்சியில் ஒரு அட்டகாசமான ஃபைட் இருக்கிறது. இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் பிரமாண்டமாக வெளியிடுகிறோம். பார்த்து ரசியுங்கள் நன்றி என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X