Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
AK61 ல் இணையும் டாப் ஹீரோக்கள்...AK61 Mission டிரெண்டிங்கிற்கு இது தான் காரணமா?
சென்னை : அஜித் அடுத்து நடிக்க உள்ள ஏகே 61 படம் பற்றிய தகவல்கள் அதிகம் வெளியாகி வரும் நிலையில் ட்விட்டரில் AK61Mission ஹேஷ்டேக் நேற்று இரவு முதல் டிரெண்டிங் ஆகி வருகிறது. இதற்கு காரணம் மாஸான மற்றொரு தகவல் தானாம்.
ஏப்ரல்
3,
ஞாயிறன்று
கலர்ஸ்
தமிழில்
என்ன
திரைப்படம்
தெரியுமா
?
அப்படி
என்ன
ஸ்பெஷல்
இந்த
படத்தில்
!
வலிமை படத்தை தொடர்ந்து ஏகே 61 படத்திலும் ஹெச்.வினோத், அஜித், போனி கபூர் கூட்டணி இணைந்துள்ளது. ஆனால் இதில் யுவன்சங்கர் ராஜாவிற்கு பதில் ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். ஏகே 61 படத்தின் ஷுட்டிங் மார்ச் மாதமே துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 6 ம் தேதி துவங்க உள்ளதாக தற்போது கூறப்பட்டு வருகிறது.

இரட்டை வேடத்தில் அஜித்
ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட ஏகே 61 படத்தில் ஆக்ஷன் காட்சிகள் மிகக் குறைவாக தான் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஹீரோ-வில்லன் என அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க போவதாக ஏற்கனவே கூறப்பட்டு விட்டது.

AK61 Mission டிரெண்டிங்
ஏகே 61 படம் பற்றிய அப்டேட்கள் வரவர ட்விட்டரில் AK61 என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வந்தது. ஆனால் நேற்று இரவு முதல் AK61Mission ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி உள்ளது. இதற்கு என்ன காரணம் என விசாரித்தால், ஏகே 61 படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்துள்ளாராம். ஏற்கனவே ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த மோகன்லால் தற்போது ஏகே 61 படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க போவதாக கூறப்படுகிறது.

இது தான் காரணமா
மோகன்லால் மட்டுமல்ல தெலுங்கு டாப் ஹீரோ நாகர்ஜுனாவும் ஏகே 61 படத்தில் நடிக்க உள்ளதாக மற்றொரு தகவலும் சொல்லப்படுகிறது. நாகர்ஜுனா இதற்கு முன் கார்த்தி நடித்த தோழா படத்தில் நடித்தார். அதற்கு பிறகு தற்போது ஏகே 61 ல் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இவங்களுக்கு என்ன ரோல்
ஆனால் ஏகே 61 படத்தில் அஜித் தான் வில்லன் என சொல்லப்படுகிறது. இதனால் மோகன்லால், நாகர்ஜுனா என்ன ரோல்களில் நடிக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஒருவேளை அஜித் மெயின் வில்லனாகவும், இவர்கள் மற்ற வில்லன்களாகவும் நடிக்க போகிறார்களா அல்லது இதில் அஜித் கேங்ஸ்டராக நடிப்பதாக கூறப்படுவதால் மோகன்லால் போலீஸ் ரோலில் நடிக்க போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஜிப்ரான் வேலையை ஆரம்பிச்சுட்டாரா
ஏகே 61 படத்திற்கு இசையமைக்கும் வேலைகளை ஜிப்ரான் எப்போதோ துவங்கி விட்டாராம். ஏப்ரல் 6 ம் தேதி ஷுட்டிங் துவங்கப்பட்ட சில நாட்களில் படத்தின் டைட்டில் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்புக்கள் வெளியிடப்பட உள்ளதாம்.