விஜய் சேதுபதியை எல்லோரும் மக்கள் செல்வன்னு கூப்பிட இது தான் காரணமா?
சென்னை : பல மொழிகளில் பிஸியாகவும், பிரபலமான நடிகராகவும் இருந்து வருகிறார் விஜய் சேதுபதி. இவரை அனைவரும் மக்கள் செல்வன் என கொண்டாடி வருகிறார்கள். அது உண்மை தான் என மீண்டும் அவர் நிரூபித்துள்ளதாக கோலிவுட்டில் பலரும் விஜய் சேதுபதியை புகழ்ந்து வருகிறார்கள்.
வில்லன், ஹீரோ என பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. கிட்டதட்ட ஒரு டஜன் படங்களுக்கும் மேலாக கையில் வைத்துள்ளார். இவரை பார்த்து திரையுலகமே ஆச்சரியப்பட்டு வருகிறது.

சிறிய பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதி
அதே சமயம், என்ன இவர் கிடைக்கிற படங்களில் எல்லாம் நடித்து வருகிறார். என்ன ரோல், என்ன மொழி என பார்க்காமல் நடித்து வருகிறார். தற்போது பாண்டியராஜனின் மகன் பிருத்வி பாண்டியராஜன் நடிக்கும் ஒபாமா படத்திலும் முக்கிய கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்து முடித்துள்ளார்.

ஆச்சரியப்படும் திரையுலகம்
பிருத்வி பாண்டியராஜன், பூனிஷா, ஜனகராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரமேஷ் கன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டைரக்டர் நானி பாலா இயக்கி உள்ள இந்த சிறிய பட்ஜெட் படத்திலும் விஜய் சேதுபதி நடித்துள்ளது திரையுலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

டைரக்டர் சொன்ன தகவல்
இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளது பற்றி டைக்டர் நானி பாலா கூறுகையில், இந்த படத்தில் முக்கிய ரோலில் கெஸ்ட் ரோலில் பிரபல நடிகர் ஒருவர் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் அவர் பல காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாது என விலகி விட்டார்.

உதவிய ஜனகராஜ்
இதனால் என்ன செய்வது என குழம்பிப் போய் இருந்த சமயத்தில் இந்த படத்தில் நடிக்க பிரபல காமெடி நடிகரான ஜனகராஜ், இந்த கேரக்டரில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சி செய்யலாம் என்றும், தன்னால் முடியவில்லை என்றால் 96 பட டைரக்டர் பிரேம்குமார் மூலமாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்கலாம் என்றார்.

இதுதான் காரணமா
ஆனால் ஜனகராஜ் கேட்டதுமே எந்த கேள்வியும் கேட்காமல் உடனடியாக ஓகே சொன்னார் விஜய் சேதுபதி. ஒப்புக் கொண்டதுடன் தேதியையும் ஒதுக்கி, நடித்தும் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என அவர் மீது அனைவரும் மரியாதை வைத்து, கொண்டாடுவதற்கு இது தான் காரணம். மூத்த கலைஞர்களை மதிப்பது, பலருக்கும் உதவி செய்வது என பலரையும் அவர் கவர்ந்துள்ளார் என டைரக்டர் நானி பாலா தெரிவித்துள்ளார்.
Recommended Video

மூத்த கலைஞருக்கு மரியாதை
விஜய் சேதுபதியும், ஜனகராஜும் 96 படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தார்கள். இருந்தாலும் எப்படி ஜனகராஜ் கேட்டதுமே விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டார் என ஜனகராஜிடமே கேட்டுள்ளார் டைரக்டர், 96 படத்தில் நடித்த போது விஜய் சேதுபதியிடம் பழகியதை வைத்து தான் அவர் உடனே ஓகே சொல்வார் என நம்பினேன் என கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











