»   »  டாக்டர்னு கூப்பிடாதீங்க: விஜய்

டாக்டர்னு கூப்பிடாதீங்க: விஜய்

Subscribe to Oneindia Tamil

என்னை எப்போதும் போல இளைய தளபதி என்றே கூப்பிடுங்கள், டாக்டர் விஜய் என்று கூப்பிட வேண்டாம் என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றுள்ள திரையுலக நிலவரப்படி, ரஜினி படத்தைத் தவிர பிற நடிகர்களின் படங்கள் 100 நாட்களைத் தாண்டி ஓடுவது பெரிய காரியமாக உள்ளது.

ஆனால் விதி விலக்காக விஜய்யின் போக்கிரி 100 நாட்களைத் தாண்டி ஓடியுள்ளது. தொடர்ந்து அந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் ஒரு தியேட்டரில் 200 நாட்களைத் தாண்டியுள்ளது.

இதில் சென்னை அமைந்தகரையில் உள்ள லட்சுமி தியேட்டரில் இப்படம் 125 நாட்களைத் தாண்டியுள்ளது. அதாவது படம் வெளியான சில வாரங்கள் கழித்துத்தான் லட்சுமியில் இப்படம் திரையிடப்பட்டது. அப்படி திரையிடப்பட்டு 125 நாட்களை எட்டியதால் இதை விழாவாகக் கொண்டாடினர்.

விழாவையொட்டி விஜய் ரசிகர்கள் பெரும் திரளாக கூடியிருந்தனர். சமீபத்தில்தான் விஜய்க்கு கெளரவ டாக்டர் பட்டம் தரப்பட்டது. அதன் பிறகு அவர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் விஜய் பேசுகையில், போக்கிரி படத்தைப் பார்த்த அனைவருக்கும் நன்றி. இதைப் பெரிய வெற்றிப் படமாக்கியுள்ளீர்கள். அதற்கும் நன்றி.

எல்ேலாரும் இப்போது என்னை டாக்டர் விஜய் என்று அழைக்கிறார்கள். ஆனால் எப்போதும் போல என்னை இளையதளபதி என்றே அழையுங்கள். அதைத்தான் நான் விரும்புகிறேன். ரசிகர்களாகிய நீங்கள் கொடுத்த பட்டம்தான் எனக்கு விசேஷமானது.

இதே தியேட்டரில்தான் நானும் எனது நண்பர்களும் சேர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாமலை படத்தைப் பார்த்தோம். அப்போது நான் வளரும் நடிகனாக இருந்தேன். இப்போது எனது படத்தின் வெற்றி விழா இங்கு கொண்டாடப்படுவது சந்தோஷமாக இருக்கிறது என்றார் விஜய்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் நிகழ்ச்சியில் பேசுகையில், விரைவில் விஜய் அடுத்த எம்.ஜி.ஆர். ஆவார். அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil