»   »  வேணாங்க... ரஜினியோட என்னை ஒப்பிடாதீங்க!- ராகவா லாரன்ஸ்

வேணாங்க... ரஜினியோட என்னை ஒப்பிடாதீங்க!- ராகவா லாரன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு நடிகர் அடுத்தடுத்து இரு வெற்றிகள் கொடுத்துவிட்டால் உடனே அவரை உச்ச நட்சத்திரத்துடன் ஒப்பிடுவது மீடியா மற்றும் ரசிகர்களின் மனோபாவமாகிவிட்டது.

அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என யாருமே இதில் விலக்கில்லை. இப்போது அந்தப் பட்டியலில் ராகவா லாரன்ஸ்.


‘காஞ்சனா 2' படத்திற்கு பிறகு லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா'. இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.


Dont compare me with Rajinikanth, says Raghava Lawrence

இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். சாய்ரமணி இயக்கியுள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.


சமீபத்தில் இப்படத்தின் 'அசையும் போஸ்டர்' வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதில் லாரன்ஸ் போலீஸ் உடையில் நடந்து வருகிறார்.


உடனே இந்தப் புகைப்படத்தை மூன்று முகம் படத்தில் ரஜினி ஏற்ற அலெக்ஸ் பாண்டியன் பாத்திரத்துடன் ஒப்பிட்டு, படங்களைப் பகிர்ந்து வந்தனர். இணையத்தில் இந்த ஒப்பீட்டுப் படம் வைரலானதால், உடனடியாக ராகவா லாரன்ஸ் விளக்கம் தெரிவித்துள்ளார்.


"ரஜினி சாருடன் என்னை ஒப்பிடாதீர்கள். அவர் முன்னாடி நான் மிகச் சிறியவன். அவரால் திரைத் துறைக்கு வந்தேன். அவரால் வளர்ந்தேன்.. எனக்கு என்றும் வழிகாட்டி ரஜினிதான்," என்று தனது விளக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

English summary
Actor - Director Raghava Lawrence has requested fans and media not to compare him with Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil