»   »  நான் ஒரு சாதாரண நடிகன், கோமாளி... எதையும் எதிர்ப்பார்க்காதீர்கள்!– மாதவன்

நான் ஒரு சாதாரண நடிகன், கோமாளி... எதையும் எதிர்ப்பார்க்காதீர்கள்!– மாதவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சான் ஓசே(யு.எஸ்): ஃபெட்னா தமிழ் விழாவில் பங்கேற்ற நடிகர் மாதவன், தான் ஒரு கோமாளி, நடிகன் என்றும், தன்னிடம் எதையும் எதிர்ப்பார்க்க வேண்டாம் என்றும் கூறினார்.

கலிபோர்னியாவில் நடந்த ஃபெட்னா தமிழ் விழாவில் நடிகர் மாதவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் நடிகர் மாதவன். நிகழ்ச்சியை 80களின் நாயகி 'தென்றலே என்னைத் தொடு' ஜெயஸ்ரீ தொகுத்து வழங்கினார்.

இயக்க மாட்டேன்

இயக்க மாட்டேன்

சினிமா தொழில்நுட்பங்கள் அனைத்தும் அறிந்தவரான நீங்கள் படம் இயக்குவீர்களா? என்ற கேள்விக்கு, இயக்குநர் என்பது அனைத்து வேலைகளையும் தோளில் போட்டுக்கொண்டு செய்யும் மிக முக்கியமான பணி. தன்னால் அவ்வளவு வேலையையும் பார்க்க முடியாது.. தெரியவும் தெரியாது என்றார் மாதவன்.

நான் வெறும் கோமாளி

நான் வெறும் கோமாளி

நீங்கள் மக்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்? என்ற கேள்விக்கு ஒரு கை கொடுப்பதை இன்னொரு கைக்கு தெரியக்கூடாது என்ற என் தந்தையின் அறிவுரையை பின்பற்றி வருகிறேன். நான் என்ன செய்தேன் என்று ஒரு போதும் வெளியே சொல்லவும் மாட்டேன். நீங்கள் தெரிந்து கொள்ளவும் முயற்சிக்க வேண்டாம். மற்றபடி, நான் ஒரு சாதாரண நடிகன், கோமாளி. பணத்தை வாங்கிக் கொண்டு நடிக்கிறேன். அவ்வளவு தான். என்னிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்." என்றார்.

தாக்கம் ஏற்படுத்தும் படங்கள்

தாக்கம் ஏற்படுத்தும் படங்கள்

மேலும் அவர் பேசுகையில், "மெழுகு வர்த்தி ஊர்வலம் உட்பட என்னுடைய படங்கள் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல தாக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன். அந்த வகையில் உருவாகும் படங்களில் நடிக்க முயற்சி செய்வேன். ஆனாலும் சினிமா என்பது பணம் சம்பாதிக்கும் தொழில். அன்பே சிவம் மிக நல்ல படம் என்று எல்லோரும் இப்போது கூறுகிறார்கள். ஆனால் படம் வெற்றி பெறவில்லை. இங்கு வெற்றி பெற்றால் தான் இடம் உண்டு என்பதையும் உணர்ந்து வெற்றி பெறக்கூடிய படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன்.

கமல் பிஎச்டி

கமல் பிஎச்டி

கமல்ஹாசனுடன் நடித்தது மிகப் பெரிய பாக்கியம். 'நான் நாலாம் க்ளாஸ், கமல் சார் பி.எச்.டி'.

அலைபாயுதே படத்தில் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், பி.சி.ஸ்ரீராம் உட்பட ஜாம்பவான்கள் இருந்ததால், நான் எந்த கவலையும் இல்லாமல் நடித்தேன். படம் தோல்வி என்றால் அவர்களுக்குத் தானே கவலை என்று எண்ணி இருந்தேன். தான் நடித்த படங்களில் மிகவும் பிடித்த படமும் அலைபாயுதே (‘பயமாயிருக்கு' டயலாக்கையும் சொல்லிக் காட்டினார்)," என்றார்.

இளையோர் மன்றத்தினருடன்...

இளையோர் மன்றத்தினருடன்...

முன்னதாக, ஃபெட்னா இளையர் மன்றத்தின் சார்பில், தமிழ் இளைஞர்களிடம் உரையாடிய மாதவன், தமிழ் மொழியின் முக்கியத்தையும் தமிழர் என்ற அடையாளத்தையும் தான் அனுபவ பூர்வமாக உணர்ந்ததாக கூறினார். வட இந்தியாவில் பிறந்து வளர்ந்த தனக்கு, தமிழன் என்ற அடையாளம் தான் பெருமை சேர்த்தது என்றும் கூறினார்.

அடையாளம் முக்கியம்

அடையாளம் முக்கியம்

"நாம் யார், நமது பூர்விகம் என்ன என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அது தான் நமது அடையாளமாக என்றென்றும் நிலைத்து நிற்கும்.

அமெரிக்க தமிழ் இளைஞர்களும் தமிழர் என்ற அடையாளத்தை எப்போதும் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள் , நமது பாரம்பரியம், பண்பாடு, வரலாற்றை மனதில் வைத்துக் கொண்டு கடைபிடியுங்கள்," என்றும் மாதவன் கேட்டுக் கொண்டார்.

English summary
Actor Madhavan who attended Fetna 2015 has said that he hasn't any idea of directing movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil