»   »  எதையும் அரசியலாக்காதீர்கள்!- விஷால் பேச்சு

எதையும் அரசியலாக்காதீர்கள்!- விஷால் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

எதையும் அரசியலாக்காதீர்கள்.. நான் கேரளாவுக்கு எதிரியல்ல, என்று 'பாயும்புலி' இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசினார்.

வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் விஷால், காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் 'பாயும் புலி'. சுசீந்திரன் இயக்கியுள்ளார்.


Dont politicise my speeches, says Vishal

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் பாடல் குறுந்தகட்டை வெளியிட கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் அதிபர் சிவா பெற்றுக் கொண்டார்.


விழாவில் விஷால் பேசும்போது, "இங்கே நான் பாயும்புலி படத்தைப் பற்றி விரிவாகப் பேசப் போவதில்லை. இங்கே வருகிற விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுக்கவில்லை. அதற்கு ஆகிற செலவுத் தொகையை இரண்டு ஏழை மாணவிகளுக்கு கல்விக்கான உதவியாகக் கொடுக்கலாம் என்றேன். அதை தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டார். அதன்படி வழங்கப் பட்டுள்ளது. பூங்கொத்து வாடிவிடும். கல்விக்கு உதவுவது, இரண்டு பேர் வாழ்க்கைக்கு வழிகாட்டும்.


Dont politicise my speeches, says Vishal

உடனே நான் பூங்கொத்து தயாரிப்பவர்களுக்கு எதிரி போல பேச ஆரம்பிக்க வேண்டாம். ஏனென்றால் நான் எது பேசினாலும் அரசியலாக்கி திசை திருப்பி விடுகிறார்கள்.


நான் வாயில்லாத ஜீவன்களுக்குக் குரல் கொடுத்தேன். தெரு நாய்கள் கொல்லப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அதை அரசியலாக்கி விட்டார்கள். 'பாய்க்காட் கேரளா' வரை பேச ஆரம்பித்து விட்டார்கள் அரசியலாக்கி விட்டார்கள். நான் கேரளாவுக்கு எதிரியல்ல. எதையும் அரசியலாக்கி விட வேண்டாம். அடிமாடுகள் துன்புறுத்தப்படுவதற்கும் அப்படித்தான் குரல் கொடுத்தேன். விமர்சிக்கப்பட்டேன் வாயில்லாத ஜீவன்களுக்கு குரல் கொடுப்பது தவறா?


Dont politicise my speeches, says Vishal

இங்கே மேடையில் பல பெரிய சாதனையாளர்கள், பெரிய மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்கள். என் முதல்படம் 'செல்லமே' வந்த போது என்னை முதன்முதலில் வாழ்த்தியவர் வைரமுத்து சார்தான். அவரது வாழ்த்து நம்பிக்கை ஊட்டியது. அதை என்றும் மறக்க மாட்டேன். எனக்கு சொத்தாக இருப்பது நண்பர்கள்தான். வேறு சொத்து எனக்கு இல்லை. அவர்கள் இல்லாமல் நானில்லை.


சினிமா என் தொழில். சினிமா என்தாய். அதற்கு பாதிப்பு வரும் போது நிச்சயம் எனக்குக் கோபம் வரும். அப்படித்தான் திருட்டு விசிடிக்கு எதிராகப் போராடினேன். இதில் அரசியல் நோக்கமும் இல்லை,ஆர்வமும் இல்லை விளம்பர நோக்கமும் இல்லை. என்னைப் போல எல்லாரும் நினைத்தால் சினிமா இன்னும் நன்றாக இருக்கும். 'பாயும் புலி 'படக்குழுவினருக்கும் விழாவுக்கு வந்த அனைவருக்கும் நன்றி,'' என்றார்.


விழாவில் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு, இந்திய ஜனநாயக் கட்சித் தலைவர் பாரி வேந்தர், கவிஞர் வைரமுத்து, தமிழ்திரைப்பட சங்கச் செயலாளர் டி.சிவா, பட அதிபர்கள் எஸ்.மதன், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன், அன்புச்செழியன், கே.ராஜன், இசையமைப்பாளர் டி.இமான், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், சுசீந்திரன், பாண்டிராஜ்,


நடிகை காஜல் அகர்வால், நடிககர் சூரி, விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி ஆகியோரும் பேசினார்கள்.


முன்னதாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உருவப்படம் திறந்து வைக்கப் பட்டது

English summary
Actor Vishal says that his recent speeches on various issues have politicised by somebody.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil