»   »  பர்ஸ்ட் 'சூப்பர் ஸ்டார்'... நெக்ஸ்ட் 'டாக்டர்'... இப்போ லேட்டா "பி.ஏ"... இது ஷாரூக் ஸ்டைல்!

பர்ஸ்ட் 'சூப்பர் ஸ்டார்'... நெக்ஸ்ட் 'டாக்டர்'... இப்போ லேட்டா "பி.ஏ"... இது ஷாரூக் ஸ்டைல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் ஷாரூக்கான் சுமார் 28 ஆண்டுகளுக்குப் பின் தான் படித்த கல்லூரியில் சென்று, தனது இளங்கலை பட்டத்தைப் பெற்றுள்ளார்.

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக வளைய வருபவர் ஷாரூக்கான். டெல்லியில் பிறந்து வளர்ந்த ஷாரூக், அங்குள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்தவர்.

கடந்த 1988ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்த அவர், பட்டம் வாங்காமல் இருந்து வந்தார். பின்னர் மும்பை வந்து, சினிமாவில் அறிமுகமானார். தற்போது வெற்றிப்பட நாயகனாக பாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மீண்டும் கல்லூரிக்கு...

மீண்டும் கல்லூரிக்கு...

இந்நிலையில், ‘ஃபேன்' என்ற படத்தின் பாடல் வெளியீட்டிற்காக டெல்லி சென்ற ஷாரூக், தனது கல்லூரிக்கு நேற்று சென்றார். அங்கு தனது பி.ஏ. பட்டத்தைக் கல்லூரி முதல்வர் ராமா சர்மாவிடம் இருந்து அவர் பெற்றார்.

சிறப்பான தருணம்...

சிறப்பான தருணம்...

இந்த சம்பவம் குறித்து ஷாரூக் கூறுகையில், "இது எனக்கு ஒரு சிறப்பான தருணம். 1988-ம் ஆண்டு கல்லூரியை விட்டு வெளியேறிய நான் திரும்பவும் வந்திருக்கிறேன்.

குழந்தைகள்...

குழந்தைகள்...

நான் இப்போது தவற விட்டது, என் குழந்தைகளைத்தான். நான் அவர்களுக்கு எனது கல்லூரியின் ஒவ்வொரு மூலையையும் காட்ட விரும்பினேன். ஆனால் அவர்கள் இப்போது என்னுடன் வரவில்லை" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மகிழ்ச்சி...

மகிழ்ச்சி...

இது தொடர்பாக கல்லூரி முதல்வர் ராமா சர்மா கூறுகையில், "இத்தனை ஆண்டுகள் கழித்து நாங்கள் ஷாருக்கிற்கு பட்டம் அளிப்பதில் மிகவும் மகிழ்கிறோம். அவரது பட்டத்தை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருந்தோம்.

பெருமை...

பெருமை...

அதை அவருக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறோம். ஒரு சூப்பர் ஸ்டாரை மாணவராக பெற்றிருந்ததற்கு இந்த கல்லூரி பெருமிதம் கொள்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

டாக்டர் பட்டம்...

டாக்டர் பட்டம்...

கடந்தாண்டு பிரிட்டனின் எடின்பர்க் பல்கலைக்கழகம், ஷாரூக்கிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actor Shah Rukh Khan received his graduation degree on Tuesday, 28 years after passing out from Hansraj College in New Delhi. On the occasion, he walk down the memory lane as he recalled his days time at his alma mater.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil