Dude Box Office: குட் பேட் அக்லி லைஃப் டைமுக்கே ஆபத்து.. 3 நாட்களில் அதிரடி காட்டிய டியூட் வசூல்!

சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் தொடர்ந்து 3 நாட்களாக 20 கோடி வசூலை தினமும் மெயின்டெயின் செய்து வருவது ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. டிராகன் திரைப்படம் சோலோ ரிலீஸாக வெளியாகி 150 கோடி வசூல் செய்த நிலையில், டியூட் திரைப்படம் பைசன், டீசல் உள்ளிட்ட படங்களுடன் மோதிய நிலையில், வசூல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தமிழ் மற்றும் தெலுங்கில் பிரதீப் ரங்கநாதனுக்கு அதிகரித்துள்ள மார்க்கெட்டை கச்சிதமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறுவடை செய்திருப்பதாக கூறுகின்றனர். தீபாவளியை முன்னிட்டு வெளியான டியூட் தீபாவளிக்கு முன்பாகவே பெரிய வசூல் வேட்டையை நடத்தியுள்ளது.

Dude Official 3 Day Box Office collection reports threat for Good Bad Ugly Lifetime
Photo Credit:

தீபாவளியான இன்று மற்றும் செவ்வாய்க்கிழமை விடுமுறையான நாளையுடன் சேர்த்தால் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிப்பது உறுதி என்கின்றனர்.

டியூட் 3 நாள் வசூல்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் நடிப்பில் வெளியான டியூட் திரைப்படம் ஜென் ஸி கிட்ஸ்களையும் இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்த நிலையில், கடந்த 3 நாட்களில் அதிகபட்சமாக உலகளவில் 66 கோடி ரூபாய் வசூலை டியூட் அள்ளியிருப்பதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஹாட்ரிக் 100 கோடி கிளப்: இந்த ஆண்டு வெளியான தனுஷின் இட்லி கடை திரைப்படம் இன்னமும் 70 கோடி வசூலில் சிக்கித் தவித்து வரும் நிலையில், 3 நாட்களில் 66 கோடி ரூபாய் வசூலை அள்ளிய டியூட் திரைப்படம் தீபாவளி மற்றும் நாளையுடன் சேர்த்து 100 கோடி வசூலை கடக்கும் என்றும் பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் 100 கோடி கிளப் உறுதியாகியுள்ளது. இந்த படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி அடுத்து அவர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள எல்ஐகே படத்திற்கு பெரும் பலமாக மாறும் என்கின்றனர்.

குட் பேட் அக்லி வசூலுக்கு ஆபத்து: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 200 கோடி வசூலை ஈட்டிய நிலையில், டியூட் திரைப்படம் 200 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டும் என்றும் இந்த மாதம் வேறு எந்த பெரிய படங்களும் வராத நிலையில், எல்ஐகே படம் வெளியாகும் வரை டியூட் தொடர்ந்து ஓடும் என்றும் குட் பேட் அக்லி படத்தின் வசூலையும் பீட் செய்து கூலி படத்துக்கு அடுத்த இடத்தில் டியூட் இருக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X