அட பிரதீப் ரங்கநாதன் பட்டாசு வெடிக்கிறதே செம ஸ்டைலா இருக்கே.. டியூட் தீபாவளி கொண்டாட்டம் மஜாதான்

சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. இதுவரை மூன்று நாட்களில் மொத்தம் 66 கோடி ரூபாயை படம் வசூலித்திருப்பதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால் அவர் ஹாட்ரிக் வெற்றியை பெற்றிருக்கிறார். அவரது மார்க்கெட் வேல்யூவும் சரசரவென்று அதிகரித்துவிடும் என்று கருதப்படுகிறது.

இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் இப்போது ஹீரோவாக கலக்கிவருகிறார். லவ் டுடே படத்தில் அவரது நடிப்பை விமர்சித்தவர்கள் எல்லாம் டிராகனில், நன்றாக நடிக்கிறாரே என்று சத்தத்தை கம்மி செய்தார்கள். இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்று நூறு கோடி ரூபாயை அள்ளியது. இதனையடுத்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்தில் நடிக்க கமிட்டானார் அவர்.

இந்தப் படமும் ஹிட்தான்: இந்தப் படமும் டிராகன் ஃபார்முலாவில் கமர்ஷியல் ஜானரில் அழுத்தமான மெசேஜை சொல்லும் பாணியில்தான் வந்தது. அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருந்தார். அவருக்கு இதுதான் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்க்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். கடந்த 17ஆம் தேதி வெளியான இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது.

Dude Pradeep Ranganathan celebrates Diwali at Aswath Marimuthu s house video goes viral

படத்தின் ஸ்பெஷல்: படத்தின் பெரிய ஸ்பெஷலாக பார்க்கப்படுவது அதன் மேக்கிங்தான். முதல் பாதியெல்லாம் எங்கேயும் போர் அடிக்காமல் விறுவிறுவென்று சென்றது. அதேபோல் இரண்டாம் பாதி திரைக்கதை கொஞ்சம் தடுமாறினாலும் நடிகர்களின் நடிப்பு காப்பாற்றிவிட்டது. அதிலும் பிரதீப் ரங்கநாதனின் நடிப்புதான் படத்தில் அட்டகாசமாக இருந்தது.ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவ்வளவு எனர்ஜியை கொட்டி நடித்திருந்தார் அவர்.

வசூலில் சக்கைப்போடு: முதல் இரண்டு படங்களில் அவரது நடிப்பை குறை சொன்ன அனைவருமே இந்தப் படத்தில் பார்த்து பிரமித்துவிட்டார்கள். இனி பிரதீப் ஸ்டைல் ஆஃப் ஆக்டிங் என்ற ஒன்றே உருவாகிவிடும் என்பதுதான் உண்மை. லவ் டுடே, டிராகன் ஆகியவை எப்படி நூறு கோடி ரூபாயை அள்ளியதோ இந்தப் படமும் 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

தீபாவளி கொண்டாட்டம்: ஏனெனில் இப்படம் மூன்று நாட்களில் உலக அளவில் 66 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. படத்துக்கு இன்னமும் கூட்டம் சென்றுகொண்டுதான் இருக்கிறது. எனவே 100 கோடி ரூபாய் உறுதி என்று திரைத்துறையினர் கூறுகிறார்கள். இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் கொண்டாடினார் பிரதீப் ரங்கநாதன். அஸ்வத்தின் வீட்டுக்கு சென்ற அவர் அங்கு 10,000 வாலா சரவெடியை படு ஸ்டைலாக பற்ற வைக்கும் வீடியோவை அஸ்வத் வெளியிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X