டியூட் தப்பிச்சுடுச்சு.. எல்ஐகே நிலைமை என்ன ஆகும்.. விக்னேஷ் சிவனுக்கு வெற்றி கிடைக்குமா?
சென்னை: வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி வசூல் செய்தது. ரவி மோகனை வைத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி படமே 100 கோடி வசூல் செய்யாத லவ் டுடே திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டிய நிலையில், தமிழ் சினிமாவே பிரதீப் ரங்கநாதனை திரும்பி பார்த்தது.
உடனடியாக பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், அந்த படம் ரெடியாகி வெளியாவதற்கு முன்னதாக அவரது அடுத்த 2 புதிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகி விட்டன.

கடைசியா தான் வந்தாரு விநாயக் என்பது போல இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 18ம் தேதி வெளியாகவுள்ள எல்ஐகே படத்தின் பட்ஜெட் ரொம்பவே பெரிது என்பதால், அந்த அளவுக்கு படம் வசூல் ஈட்டுமா என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.
உயரும் பட்ஜெட்: பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே திரைப்படம் 5 கோடி பட்ஜெட்டில் வெளியாகி 100 கோடி வசூல் செய்தது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் நடித்த டிராகன் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி 150 கோடி வரை வசூல் செய்தது. அந்த படத்தின் பட்ஜெட் 37 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளிக்கு வெளியான டியூட் படத்தின் பட்ஜெட் 27 கோடி என தகவல்கள் வெளியாகின. அந்த படமும் 100 கோடி வசூல் ஈட்டியது.
எல்ஐகே பட பட்ஜெட்: மலேசியாவில் படமாக்கப்பட்ட ஃபியூரிஸ்டிக் தமிழ்நாடு என்கிற ட்ரீம் ப்ராஜெக்ட் படமாக விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், க்ரித்தி ஷெட்டியை வைத்து உருவாக்கியுள்ள எல்ஐகே திரைப்படத்தின் பட்ஜெட் மட்டுமே 60 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன. 150 கோடிக்கும் மேல் வசூல் வந்தால் தான் பெரிய லாபத்தை படம் ஈட்டும் என்கின்றனர்.
4வது 100 கோடி வருமா?: பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து 100 கோடி வசூல் என பாக்ஸ் ஆபீஸில் ஹாட்ரிக் அடித்த நிலையில், தீபாவளியை தொடர்ந்து வெகு விரைவில் டிசம்பர் 18ம் தேதி வெளியாகவுள்ள எல்ஐகே திரைப்படம் இன்னொரு 100 கோடி படமாக பிரதீப் ரங்கநாதனுக்கு மாறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. டியூட் படமே ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்திய நிலையில், முதல் 5 நாட்களுக்குப் பிறகு வசூல் அப்படியே டிராப் ஆகத் தொடங்கியது. டிசம்பர் 18ம் தேதி வியாழக்கிழமை என்பதால், தொடர்ந்து 4 நாட்கள் வசூல் மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை, நியூ இயர் விடுமுறை என கல்லா கட்டினால் மட்டுமே படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என்கின்றனர். விக்னேஷ் சிவன் படங்கள் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில், அவரது கம்பேக் படமாக எல்ஐகே அமையுமா என்பதையும் வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











