»   »  10 பிறவி எடுத்தாலும் அப்பா போல நடிக்க முடியாது… துல்கர் சல்மான்

10 பிறவி எடுத்தாலும் அப்பா போல நடிக்க முடியாது… துல்கர் சல்மான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்னும் 10 பிறவி எடுத்தாலும், நான் எவ்வளவும் சாதித்தாலும், என் தந்தையின் நடிப்புத் திறமையில் மில்லியனில் ஒரு சதவீதம்கூட என்னால் ஈடுகொடுக்க முடியாது என்று நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் கூறியுள்ளார். ராம்கோபால் வர்மாவின் கிண்டல் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக இதனை அவர் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஓ காதல் கண்மணி'. தெலுங்கில் ‘ஓகே பங்காரம்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

கதை கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் காதலும், துல்கர், நித்யாவின் இளமையான நடிப்பும் விமர்சகர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ராம்கோபால் வர்மா சர்ச்சை

ராம்கோபால் வர்மா சர்ச்சை

சினிமாவோ அரசியலோ சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா, 'ஓ காதல் கண்மணி' படத்தையும் விட்டுவைக்கவில்லை.

ஓ காதல் கண்மணி

காதல் கண்மணி' படத்தைப் பார்த்துவிட்டு "இப்போதான் மணிரத்னத்தின் படத்தைப் பார்த்தேன்.

துல்கர் சல்மானுக்கு விருது

விருது வழங்குபவர்களுக்கு சிறிதளவேனும் நியாய உணர்வு இருந்தால், மம்முட்டிக்கு வழங்கிய விருதுகளை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டு, அவற்றை அவரது மகன் துல்கர் சல்மானுக்கு வழங்கிவிடுவார்கள்.

மம்முட்டி வெறும் ஜூனியர்தான்

அவரது மகனோடு ஒப்பிடும்போது மம்முட்டி வெறும் ஜூனியர் ஆர்டிஸ்டே. தனது மகனிடமிருந்து மம்முட்டி நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, யதார்த்தமான நடிப்பை.

துல்கருக்கு பெருமை

கேரள மாநிலத்தை மற்ற இடங்களில் பெருமையைடையச் செய்ய பல வருடங்களாக மம்முட்டியால் முடியவில்லை, அதை இன்னும் சில வருடங்களில் மம்முட்டியின் மகன் செய்துவிடுவார்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் ராம் கோபால் வர்மா.

துல்கர் சல்மான் பதில்

துல்கர் சல்மான் பதில்

ராம் கோபால் வர்மாவின் கருத்துக்களுக்கு மம்முட்டியின் மகன் துல்ஹர் சல்மான், உடனடியாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ளார். "இன்னும் 10 பிறவி எடுத்தாலும், நான் எவ்வளவும் சாதித்தாலும், என் தந்தையின் நடிப்புத் திறமையில் மில்லியனில் ஒரு சதவீதம்கூட என்னால் ஈடுகொடுக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

மல்லுவுட் பிரபலபங்கள்

மல்லுவுட் பிரபலபங்கள்

ராம்கோபால் வர்மாவின் கருத்துக்கு எதிராக ஃபேஸ்புக்கில் மலையாள திரை நட்சத்திரங்களும் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஸ்டேட்டஸ் போட்டே தன்னுடைய இருப்பை வெளிப்படுத்தி வருகிறாரோ ராம்கோபால் வர்மா என்று கிண்டலடித்துள்ளனர்.

English summary
The young actor immediately responded to Ram Gopal Varma, through a posting a small note in his Facebook page. Quoting Dulquer: “In ten lifetimes I won't be one millionth the actor my father is, no matter what I accomplish”

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil