»   »  சல்மானுக்கு எப்போது திருமணம் என கடவுளுக்கே தெரியாது: தந்தை கிண்டல்

சல்மானுக்கு எப்போது திருமணம் என கடவுளுக்கே தெரியாது: தந்தை கிண்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சல்மான் கானுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்பது கடவுளுக்கே தெரியாது என அவரின் தந்தை சலீம் கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 50 வயதாகிறது. ஆனால் அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவரது வாழ்வில் பல காதல்கள் வந்து சென்றுவிட்டன. இந்நிலையில் தான் சல்மானுக்கும், நடிகை லூலியா வந்தூருக்கும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் என்று கூறப்படுகிறது.

Even God doesn't know "When is Salman getting married": Salim

இருப்பினும் இது குறித்து சல்மான் எதுவும் தெரிவித்தபாடு இல்லை. இதனால் உண்மையிலேயே அவர் இந்த ஆண்டு திருமணம் செய்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் சல்மானின் தந்தை சலீம் கான் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சல்மானுக்கு எப்பொழுது திருமணம் என்பதை தவிர வேறு எந்த கேள்வியையும் என்னிடம் கேட்கலாம். அவருக்கு எப்பொழுது திருமணம் என்று கடவுளுக்கே தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

English summary
Salman Khan's father Salim Khan tweeted that, 'You may ask me any question except "When is Salman getting married" - even god doesnt know.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil