»   »  சிவகார்த்திகேயனுடன் இணைந்து தமிழில் களமிறங்கும் நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில்

சிவகார்த்திகேயனுடன் இணைந்து தமிழில் களமிறங்கும் நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மோகன் ராஜா-சிவகார்த்திகேயன் படத்தில் மற்றொரு புதுவரவாக மலையாள நடிகர் பஹத் பாசில் இணைந்திருக்கிறார்.

'ரெமோ' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜாவின் அடுத்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

'தனி ஒருவன்' வெற்றியைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கவுள்ளார்.

Fahad Fazil Debut in Tamil

தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா இப்படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்ததை, அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மற்றொரு ஆச்சரியமாக மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரும், நஸ்ரியாவின் கணவருமான பஹத் பாசில் இப்படத்தில் இணைந்திருக்கிறார்.

மலையாள சினிமாவில் நல்ல படங்களாக தேடித்தேடி நடித்து வரும் பஹத், இப்படத்தின் மூலம் தன்னுடைய தமிழ் அறிமுகத்தைத் தொடங்குகிறார்.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது. தனி ஒருவனைத் தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

English summary
Fahad Fazil Debut in Tamil for Mohan Raja's Next.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil