அட...ராம் சரணுக்கும் இவர் தான் வில்லனா...செம ஹாட் அப்டேட்
ஐதராபாத் : ராம் சரணின் 15 வது படமாக உருவாகி வரும் பான் இந்தியன் படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்கி வருகிறார். செப்டம்பர் 8 ம் தேதி சிறப்பு பூஜை நிகழ்ச்சியுடன் இந்த பிரம்மாண்ட மெகா பட்ஜெட் படத்தை துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்க கியாரா அத்வானியை ஏற்கனவே முடிவு செய்து விட்டார் டைரக்டர் ஷங்கர். இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக மலையாள சூப்பர் ஹீரோ ஃபகத் ஃபாசிலும் இந்த படத்தில் இணைகிறாராம். ஃபகத் ஃபாசில் ஏற்கனவே அதிகம் எதிர்பார்க்கப்படும் பல படங்களில் நடித்து வருகிறார்.

ஃபகத் ஃபாசிலிடம் படக்குழு தீவிரமாக பேசி வருகிறதாம். அவர் ஓகே சொல்லி விட்டால், இந்த படத்தில் முக்கிய ரோலில் அவர் நடிப்பாராம். இவர் மட்டுமல்ல மற்றொரு மலையாள டாப் ஹீரோவான ஜெயராமும் நடிக்க போகிறாராம். நடிகை அஞ்சலியும் ஆர்சி 15 ல் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
ஃபகத் ஃபாசில் தற்போது பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார். இதற்காக சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகவும் ஆனார். நேற்று வெளியான புஷ்பா படத்தின் புதிய லுக் போஸ்டரில் மொட்டை தலையுடன் செம மிரட்டலாக போஸ் கொடுத்திருந்தார் ஃபகத் ஃபாசில்.
தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் 5 வில்லன்களில் ஒருவராகவும் ஃபகத் ஃபாசில் நடித்து வருகிறார். இதற்கு முன் சிவ கார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்திலும் ஹேண்ட்சம் வில்லனாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்திருக்கிறார் ஃபகத் ஃபாசில்.
இந்நிலையில் ராம் சரண் படத்திலும் நடிக்க ஃபகத் ஃபாசில் நடிக்க ஒப்புக் கொண்டால் அது படத்திற்கு கூடுதல் மாஸாக அமையும் என சொல்லப்படுகிறது. இந்த படத்திலும் ஃபகத் ஃபாசில் வில்லன் ரோலில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இந்த படம் ஒரே சமயத்தில் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட உள்ளதாம். இந்த படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடிக்க போகிறாராம். ஆர்சி 15 படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளது. புகழ்பெற்ற இந்நிறுவனம் தயாரிக்கும் 50 வது படம் இதுவாகும்.


Click it and Unblock the Notifications











