சிவகார்த்திகேயனின் சிங்கபாதை... லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்

சென்னை : அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ஆயுத பூஜை விடுமுறை நாளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அக்டோபர் 9 ம் தேதி தியேட்டர்களில் இந்த படம் ரிலீசாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து டாக்டர் படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பிளாக் காமெடி படத்தில் பிரியங்கா அருள் மோகன் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2019 ம் ஆண்டு வெளியான ஹீரோ படத்திற்கு பிறகு ரிலீசாக போகும் சிவகார்த்திகேயனின் படம் என்பதால் மிக பிரம்மாண்டமாக டாக்டர் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரிலீசுக்கு தயாராகும் படங்கள்

ரிலீசுக்கு தயாராகும் படங்கள்

டாக்டர் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடித்து வரும் ரொமான்டிக் காதல் படமான டான் படத்தை டைரக்டர் சிபி சக்ரவர்த்தி இயக்கி வருகிறார். இந்த படமும் கிட்டதட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தை 2022 ம் ஆண்டின் துவக்கத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

வரிசையாக ரிலீஸ்

வரிசையாக ரிலீஸ்

இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த சையின்ஸ் ஃபிக்ஷன் படமான அயலான் படமும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 2022 ம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். சிவகார்த்திகேயனின் படங்கள் வரிசையாக ரிலீசுக்கு தயாராகி வருவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன்

இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன்

இதைத் தொடர்ந்து அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு சிங்க பாதை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டைரக்டர் அட்லீயிடம் அசிஸ்டென்டாக இருந்த அசோக், இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ப்ரீப்ரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பாலிவுட் ஒளிப்பதிவாளர்

பாலிவுட் ஒளிப்பதிவாளர்

சிங்க பாதை படத்தின் ஷுட்டிங் அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாம். லேட்டஸ்ட் அப்டேட்டாக இந்த படத்தில் பாலிவுட்டின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் Dudley இணைந்துள்ளாராம். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

Recommended Video

Sivakarthikeyan Speech | Naai Sekar Title Issue | Vadivelu | Sathish | Filmibeat Tamil
 இந்த படங்களுக்கு இவர் தானா

இந்த படங்களுக்கு இவர் தானா

Dudley இதற்கு முன் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். விஜய் சேதுபதியின் ஜுங்கா, சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த பூமி ஆகிய படங்களில் பணியாற்றி உள்ளார். இதனால் சிவகார்த்திகேயனின் சிங்க பாதை படத்திலும் இவர் இணைந்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X