»   »  'லவ் யூ', 15ம் தேதி சந்திப்போம்: ஷாருக்கான் வீட்டு சுவரில் கிறுக்கிய ரசிகர்கள்

'லவ் யூ', 15ம் தேதி சந்திப்போம்: ஷாருக்கான் வீட்டு சுவரில் கிறுக்கிய ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பங்களாவான மன்னத்தின் காம்பவுண்டு சுவரில் ரசிகர்கள் யாரோ கிறுக்கியுள்ளனர்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் வீடு மும்பையில் உள்ளது. பெரிய பங்களாவான அதன் பெயர் மன்னத் ஆகும். தற்போது ஷாருக்கான் ஊரில் இல்லை. இந்நிலையில் ரசிகர்கள் யாரோ அவரது வீட்டு காவலாளிகளுக்குக் கூட தெரியாமல் காம்பவுண்டு சுவரில் கிறுக்கியுள்ளனர்.

இது பற்றி அறிந்து ஷாருக்கான் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

லவ் யூ எஸ்.ஆர்.கே.

லவ் யூ எஸ்.ஆர்.கே.

ரசிகர்கள் சுவரில் லவ் யூ எஸ்.ஆர்.கே., 15ம் தேதி சந்திப்போம் என்று எழுதியுள்ளனர். அதற்கு கீழ் கௌரவ் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும் இதை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை.

முதலாளி

முதலாளி

சுவரில் உள்ளதை எங்கள் முதலாளி உத்தரவிடும் வரை தொட மாட்டோம். அவர்கள் எதுவும் தவறாக எழுதவில்லை. அதனால் அதை மூடி மறைக்க வேண்டியது இல்லை என ஷாருக் வீட்டு காவலாளிகள் தெரிவித்துள்ளனர்.

பாஸ்

பாஸ் ஊரில் இல்லை. 20 நாட்கள் கழித்து தான் வருவார். அவர் அதை அழிக்கச் சொன்னால் செய்வோம் என்று காவலாளிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

ஷாருக்கான்

வீட்டைவிட்டுவிட்டு ஒரு நாள் வெளியே செல்ல முடியவில்லை. யாராவது ஏதாவது செய்துவிடுகிறார்கள்!! அதிர்ச்சியாக உள்ளது!!! என ஷாருக்கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Mysterious fans of actor Shah Rukh Khan have painted graffiti on the wallsof his bungalow Mannat in Mumbai while he was not home.
Please Wait while comments are loading...