»   »  குமுதாவை மட்டும் அல்லாமல் ரசிகர்களையும் ஹேப்பியா வச்சுக்க வேணாமா அண்ணாச்சி?

குமுதாவை மட்டும் அல்லாமல் ரசிகர்களையும் ஹேப்பியா வச்சுக்க வேணாமா அண்ணாச்சி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: மக்கள் செல்வன்.. இது விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய பட்டம். ஆனால் இந்தப் பட்டத்துக்கேற்றார் போல அவர் செயல்படுவதில்லை, மக்களை அதாவது தனது ரசிகர்களை மதிப்பதில்லை என்று புகார் கிளம்பியுள்ளது.

றெக்க என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அவருக்கு இதில் ஜோடி போட்டிருப்பவர் லட்சுமி மேனன். படப்பிடிப்பு காரைக்குடிக்குப் பக்கத்தில் கானாடுகாத்தான் கிராமத்தில் நடந்து வருகிறது.


Fans upset over Vijay Sethupathi

காரைக்குடிக்கு வந்த சில சுற்றுலாப் பயணிகள் கானாடு காத்தானில் உள்ள கோவிலுக்குப் போயுள்ளனர். அப்போது நடை சாத்தப்பட்டிருந்ததால் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது றெக்க படப்பிடிப்பு குறித்துத் தெரிய வந்துள்ளது. அந்தக் குழுவில் இருந்த ஒருவர் திரையுலகில் பலருடன் தொடர்பு வைத்திருப்பவர். எனவே எங்களைக் கூட்டிட்டுப் போய்க் காட்டப்பா என்று அவருடைய உறவினர்கள் கூறியுள்ளனர்.


சரி என்று அவரும் அழைத்துப் போயுள்ளார். ஆனால் அங்கு போய் விஜய் சேதுபதியைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள இவர்கள் ஆர்வம் காட்டியபோது அவர் கண்டு கொள்ளவில்லையாம். அதை விட வயதானவர்கள் என்று கூட பாராமல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து நடிகையுடன் பேசுவதில்தான் மும்முரமாக இருந்தாராம்.


இதனால் அவரைப் பார்க்கப் போனவர்கள் அதிருப்தி அடைந்து கிளம்பி வந்து விட்டனராம். பெரிய பெரிய நடிகர்களை எல்லாம் பார்த்துள்ளோம். இப்படி யாருமே நடந்ததில்லை. நம்மைப் பார்க்க வந்த ரசிகர்கள் என்று பாசத்தோடு பேசுவார்கள், புகைப்படத்திற்குப் போஸ் தருவார்கள். இவர் இப்படி மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறார்களே என்று புலம்புகின்றனர்.


குமுதாவை மட்டும் அல்லாமல் ரசிகர்களையும் ஹேப்பியா வச்சுக்க வேணாமா அண்ணாச்சி?

English summary
A group of fans are upset over actor Vijay Sethupathi, who tried to take a snap with the actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil