»   »  கணக்கு போட்டு காய் நகர்த்தும் பிரபாஸ்: கடுப்பில் ரசிகர்கள்

கணக்கு போட்டு காய் நகர்த்தும் பிரபாஸ்: கடுப்பில் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடிப்பது அவரின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம்.

பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் பிரபாஸ். சுஜீத் இயக்கி வரும் இந்த படத்தின் ஹீரோயின் மட்டும் இதுவரை முடிவாகவில்லை.

முதலில் அனுஷ்கா தான் நடிப்பதாக இருந்தது.

அனுஷ்கா

அனுஷ்கா

சுஜீத் அனுஷ்காவை வெயிட்டை குறைக்க சொல்ல அவரால் முயன்றும் முடியவில்லை. இதையடுத்து பாலிவுட் பக்கம் ஹீரோயின் தேடி ஷ்ரத்தா கபூரை முடிவு செய்துள்ளார்கள்.

பாலிவுட்

பாலிவுட்

பிரபாஸுக்கு பாலிவுட் போகும் ஆசை உள்ளது. இந்நிலையில் அவரின் சாஹோ படத்தில் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். இசையமைப்பாளரும் பாலிவுட்காரர்களான ஷங்கர்-இஹ்சான்-லாய்.

பிரபாஸ்

பிரபாஸ்

சாஹோ படத்திற்கு பாலிவுட் நடிகையை ஹீரோயினாக்கினால் வட இந்தியா பக்கம் வியாபாரம் செய்வது எளிது என்று கணக்கு போட்டுள்ளார் பிரபாஸ். பாலிவுட்டில் அறிமுகமாகும் முன்பு ஆழம் பார்க்க விரும்புகிறாராம் பிரபாஸ்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

அனுஷ்காவும், பிரபாஸும் மீண்டும் ஜோடி சேர்வார்கள் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் பிரபாஸ் ஷ்ரத்தாவுடன் நடிக்க உள்ளது அவரின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம்.

English summary
According to the latest reports, Prabhas' fans are not much happy about his pairing with Shraddha Kapoor. Interestingly, we also hear that Prabhas was keen to rope in a Bollywood actress owing to a surprising reason!
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil