»   »  ஒருவழியாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த அஜீத்

ஒருவழியாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை திரையுலகினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அஜீத் கலந்து கொள்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் புரட்சி நடந்து வருகிறது. தமிழர்களின் அறவழிப் போராட்டத்தை நாடே கூர்ந்து கவனித்து வருகிறது.

Finally, Ajith supports Jallikattu

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திரையுலகினர் சென்னை தி. நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நாளை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் சங்கத்தினர், தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் பெப்சி ஆட்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

ரஜினி, கமல், சூர்யா, விஜய், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அஜீத் மட்டும் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் அவர் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவை தெரிவிக்க உள்ளாராம்.

English summary
Ajith has expressed his support for Jallikattu. He is going to participate in Nadigar sangam's protest tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil