»   »  கடைசியில என்னையும் இந்தப் பக்கம் வர வைச்சிட்டீங்களே...ஃபேஸ்புக், ட்விட்டரில் கைகோர்த்த சசிகுமார்

கடைசியில என்னையும் இந்தப் பக்கம் வர வைச்சிட்டீங்களே...ஃபேஸ்புக், ட்விட்டரில் கைகோர்த்த சசிகுமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடைசியில என்னையும் இந்தப் பக்கம் வர வைச்சிட்டீங்களே? என்ற கேள்வியுடன் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் இணைந்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான சசிகுமார்.

முன்னர் எப்படியோ ஆனால் தற்போதைய திரையுலகைப் பொறுத்தவரையில் பூஜை தொடங்கி படம் வெளியாவது வரை சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது.

Finally Sasikumar Joined Twitter

இதனை உணர்ந்து அனைத்து நடிக, நடிகையரும் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் தொடர்பை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான சசிகுமார் இன்று ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் முறையே இணைந்திருக்கிறார். இது குறித்து அவர் தம்முடைய பதிவில் "என்னுடைய பெயரில் நிறைய பேர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே நான் களத்தில் இறங்கியுள்ளேன். என்னைப் பற்றிய சுய புராணங்கள், விளம்பரங்கள் அதிகம் இருக்காது.

என்னுடைய படம், என் பார்வை, சந்தோஷம், துக்கம் இப்படி மனதில் தோன்றுவதை இறக்கி வைப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இந்த வருகைக்குப் பின் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சூரி, நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் சசிகுமாரின் ட்விட்டர் வருகைக்கு நல்வரவு அளித்துள்ளனர்.

வரலட்சுமியின் வரவேற்புக்கு "நன்றி சூறாவளி இப்படிக்கு சன்னாசி மாமன் என்று குறும்பாக சசிகுமார் நன்றி கூறியிருக்கிறார். இதேபோல சூரிக்கும் போராளி புகைப்படத்தைப் பதிவிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார்.

இது போல மேலும் பலரும் சசிகுமாரின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் வரவுக்கு தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.

English summary
Actor/Director M.Sasikumar has Joined Twitter on Monday. Actress Varalakshmi Sarathkumar and Soori both are welcome The Director in Twitter Page.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil