»   »  கமல் செம பாஸ்ட்.... மே 25ல் தூங்காவனம் படத்தின் பர்ஸ்ட் லுக்!

கமல் செம பாஸ்ட்.... மே 25ல் தூங்காவனம் படத்தின் பர்ஸ்ட் லுக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தமவில்லன் படத்தைத் தொடர்ந்து விஸ்வரூபம்-2 , பாபநாசம் படங்களை முடித்து விட்ட கமல் தற்போது தூங்கா வனம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நீண்ட காலமாக கமலின் உதவியாளராக இருந்த ராஜேஷ் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.


First look of Kamal Haasan’s ‘Thoongaavanam’ on May 25

அடுத்த வாரம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. கமலுடன் மனிஷா கொய்ராலா, த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் ரியாஸ் கான் நடிக்க இருக்கும் இந்தப் படம் ஆக்சன் கம் திரில்லர் படமாக இருக்குமாம்.


தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்க இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட முடிவு செய்து அதற்கான போட்டோ ஷூட் வேலைகள் நடத்தி வருகிறார்


கமல்.மே மாதம் 25 ம் தேதி தூங்கா வனம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் எனத் தற்போது தெரியவந்துள்ளது.


கமல் படம்னாலே ஒரு எதிர்பார்ப்பு தன்னால வந்துடுதுப்பா...!

English summary
The makers of Kamal Haasan- starrer Tamil-Telugu bilingual “Thoongaavanam” are planning to unveil the first look of the movie on May 25.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil