இரண்டு வருஷம் ஆச்சு... கார்த்தி பகிர்ந்த க்யூட் ஃபோட்டோ
சென்னை : நடிகர் கார்த்தி முதல் முறையாக தனது குழந்தைகளுடன் இருக்கும் ஃபோட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மணிரத்னம் இயக்கி உள்ள பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தில் பவர்ஃபுல்லான வந்தியத்தேவன் ரோலில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம் 2022 ம் ஆண்டின் மத்தியில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

விரைவில் பொன்னியின் செல்வன் டீசர்
அதைத் தொடர்ந்து 2022 ம் ஆண்டின் பிற்பகுதியில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளது.

வரிசையாக கார்த்தி படங்கள்
இதைத் தொடர்ந்து விருமன், சர்தார் என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஓய்வில் ஜாலியாக ரிலாக்ஸ் செய்யும் ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

கார்த்தி பகிர்ந்த ஃபோட்டோ
அந்த வரிசையில் இன்று முதல் முறையாக குழந்தைகளுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார் கார்த்தி. மகள் மற்றும் மகனுடன் மலைப்பகுதியில் நடந்து செல்லும் ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார் கார்த்தி. இதுவரை தனது குழந்தைகளின் ஃபோட்டோவை கார்த்தி பகிர்ந்ததில்லை. இப்போதும் பின்புறம் நடந்து செல்லும் ஃபோட்டோவை தான் கார்த்தி பகிர்ந்துள்ளார்.

இரண்டு வருடமாச்சு
இந்த ஃபோட்டோவுடன், கடந்த இரண்டு வருடங்களாக எந்த பயணமும் இல்லை. குழந்தைகளுடன் முதல் முறையாக அவுட்டிங் வந்துள்ளேன். இயற்கையின் அழகுடன் பயணம். குடும்பத்துடன் ரிலாக்ஸாகவும், அமைதியாகவும் இருக்கும் வகையில் விடுமுறை பயணத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி. அடுத்தடுத்த பயணங்களை நாங்கள் திட்டமிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

பாராட்டும் ரசிகர்கள்
இந்த ஃபோட்டோவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கார்த்திக்கு இவ்வளவு பெரிய பெண் குழந்தை இருக்கா. இன்றைய தினத்தின் சிறந்த ஃபோட்டோ. சூப்பர் அண்ணா. பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் அண்ணா. மகனின் முகத்தை எப்போது முன்புறம் காட்ட போகிறீர்கள் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











