»   »  விவேக் நீங்க அஜீத் மீது வைத்துள்ள பாசம் தெரியுது, ஆனால் இது தேவையா?

விவேக் நீங்க அஜீத் மீது வைத்துள்ள பாசம் தெரியுது, ஆனால் இது தேவையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இருக்கிற பஞ்சாயத்து போதாது என்று பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் அஜீத்தை சூப்பர் ஸ்டார் என்று அழைத்துள்ளார்.

தமிழகத்தில் இந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து மட்டும் என்றும் ஓயாதது. ரஜினி ரசிகர்களோ எங்கள் தலைவர் தான் ஒரே மற்றும் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று கூறி வருகிறார்கள்.


விஜய் ரசிகர்களோ எங்கள் தளபதியே அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்.


நயன்தாரா

நயன்தாரா

சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தானே போட்டியும், பஞ்சாயத்தும் நான் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை எடுத்துக் கொள்கிறேன் என்று நயன்தாரா ஒரு பக்கம்.


அஜீத்

அஜீத்

சூப்பர் ஸ்டார் பட்டமே வேண்டாம் ஆளவிடுங்க சாமி என்று ஒதுங்கியிருக்கிறார் அஜீத். இந்நிலையில் விவேகம் படத்தில் வில்லனாக நடித்து வரும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயோ அஜீத்தை போய் சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார்.


விவேக் ஓபராய்

விவேக் ஓபராய்

விவேக் ஓபராய் சொல்லியிருக்க மாட்டார், நீங்களாக பில்ட்அப் கொடுக்கிறீர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. விவேக் கூறியிருப்பதாவது, நான் முதல் தமிழ் படத்தில் நடித்து வருகிறேன். படத்தின் பெயர் விவேகம். ஹீரோ தென்னிந்திய சூப்பர் ஸ்டார் அஜீத் என்று கூறியுள்ளார்.


மெகா பட்ஜெட்

மெகா பட்ஜெட்

விவேகம் ரூ. 120 கோடியில் எடுக்கப்படுகிறது. நாங்கள் ஐரோப்பாவில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டோம். தமிழ் படத்தில் நடிப்பது ஜாலியாக உள்ளது. அஜீத் குமாருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் பிடித்துள்ளது என விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.


English summary
Bollywood actor Vivek Oberoi has called Ajith Kumar as superstar. He finds acting in tamil film as exciting and he loves working with Ajith.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil