»   »  ஆவேச ரசிகர்கள்... அமைதிகாக்கச் சொல்லும் ரஜினி!

ஆவேச ரசிகர்கள்... அமைதிகாக்கச் சொல்லும் ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைக்கு ரஜினி ரசிகர்களைப் போல மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் யாரும் இருக்க முடியாது. காரணம் அவர்கள் ரஜினியை வெறும் திரைப் பிம்பமாக மட்டும் பார்ப்பவர்கள் இல்லை. பெரும்பாலானவர்கள் ரஜினியை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்ப்பவர்கள்.

அப்படிப்பட்ட ரஜினிக்கும் அவரது படத்துக்கும் எதிராக மிகக் கச்சிதமாக திட்டமிடப்பட்ட ஒரு சதி அரங்கேறுகிறதோ என்ற எண்ணம் அவர்களை மனக் கொதிப்புக்கு ஆளாக்கியுள்ளது.

Furious Rajini fans turns against Distributors

லிங்கா படம் வெளியான நாளிலிருந்தே நஷ்டம் என்றும் படம் சரியில்லை என்றும் ஒரு கூட்டம் கிளம்பியது. உலகிலேயே படம் வெளியான மூன்றாம் நாள் நஷ்டம் என்று கூறிய விநியோகஸ்தர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள் என அதிர்ச்சியோடு பார்த்தது திரையுலகம்.

அன்று ஆரம்பித்த எதிர்மறைப் பிரச்சாரம் கடந்த 30 நாட்களாகத் தொடர்ந்தது. இன்று அதே கூட்டம் உண்ணாவிரதம் என்று வள்ளுவர் கோட்டத்தில் அமர்ந்தபோதுதான், இந்த பிரச்சாரத்தின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்ற உண்மை அம்பலத்துக்கு வந்தது.

நாம் தமிழர் கட்சியை நடத்தி வரும் சீமானும், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி என்ற பெயரில் அரசியல் செய்துவரும் பண்ருட்டி வேல்முருகனும் இவர்களுக்கு பக்க பலமாய் நிற்கிறார்கள் என்பது தெரிய வந்ததுமே, சினிமாவிலிருப்பவர்களும், சினிமாவைப் பார்ப்பவர்களும் நிஜம் என்ன என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக மீடியா, சீமானுக்கும வேல் முருகனுக்கும் இங்கென்ன வேலை? என்ற கேள்வியை வெளிப்படையாகவே கேட்டுவிட்டது. இவர்கள் தூண்டிவிட்டுத்தான் ரஜினி எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்துகிறீர்களா என்று கூடக் கேட்டுவிட்டார்கள்.

மீடியாவே இப்படி என்றால், ரஜினியின் ரசிகர்கள் எப்படி நினைப்பார்கள்?

தங்கள் தலைவரின் புகழைக் கெடுக்கவும், வேறு ஒரு நடிகரை முதன்மைப்படுத்தவும்தான் சீமான் இந்த வேலையில் இறங்கியிருக்கிறார் என அவர்கள் சமூக வலைத் தளங்களில் கொந்தளிப்புடன் விவாதித்து வருகின்றனர்.

அதே நேரம் இந்த ஆன்லைன் போராளிகள் ஒருபோதும் களத்துக்கு வருவதில்லை.

ஆனால் ரஜினிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அடிமட்ட ரசிகர்கள் இப்போது கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.

சென்னையில் லிங்கா படத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள் என்று தெரிந்ததுமே, பதிலுக்கு பெரும் ஆர்ப்பாட்டத்துக்கு தயாரானார்கள் சென்னை மாவட்ட ரசிகர்கள். திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்ட ரசிகர்களும் தயாரான போது, ரஜினி தரப்பில் அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது.

ரசிகர்கள் யாரும் இப்போதைக்கு ஆர்ப்பாட்டத்தில் இறங்க வேண்டாம். தலைவர் பார்த்துக் கொள்வார் என்பதே மேலிடத்திலிருந்து வந்த தகவல் என்றார்கள் மன்ற நிர்வாகிகள்.

English summary
Rajini orders his fans to keep quit in Lingaa issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil