»   »  கடவுள் இருக்கான் குமாரு... செண்டிமெண்டாக 2 ஹீரோயின்களுடன் டூயட் பாடும் ஜி.வி.பிரகாஷ்

கடவுள் இருக்கான் குமாரு... செண்டிமெண்டாக 2 ஹீரோயின்களுடன் டூயட் பாடும் ஜி.வி.பிரகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடவுள் இருக்கான் குமாரு படத்தில் பிரியா ஆனந்த், கீர்த்தி சுரேஷ் என்று 2 நடிகைகளுடன் ரொமான்ஸ் பண்ணவிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

டார்லிங் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் ஆனந்தி, மனிஷா யாதவ்வுடன் இணைந்து நடித்தார்.


த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா இந்த வருடத்தின் வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியது விளைவு தற்போது அரை டஜன் படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.


G.V.Prakash Team Up with Keerthy Suresh, Priya Anand

இயக்குநர் ராஜேஷின் கடவுள் இருக்கான் குமாரு படத்தின் ஹீரோவாக மாறியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரியா ஆனந்த் என்று 2 நாயகிகளுடன் ரொமான்ஸ் பண்ணப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


2 நாயகிகளுடன் இணைந்து நடித்த த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா வெற்றி பெற்றதால் செண்டிமெண்டாக இந்தப் படத்திலும் 2 ஹீரோயின்களுடன் டூயட் பாடுகிறார் ஜி.வி.பிரகாஷ்.


ஜி.வி.பிரகாஷ், பிரியா ஆனந்த், கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் இணைந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் ராஜேஷ் அடுத்த வருடம் தொடங்குகிறார்.


இந்த படத்தைப்பற்றி இயக்குநர் ராஜேஷ் "கடவுள் இருக்கான் குமாரு பாலிவுட் படங்களைப் போன்று டீசன்ட்டான ஒரு படமாக இருக்கும். பிரியா ஆனந்த், கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் படத்தில் இணையான முக்கியத்துவம் இருக்கும்" என்று கூறுகிறார்.


முன்னதாக ஜி.வி.யின் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் பிரியா ஆனந்த் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
After Trisha Illana Nayanthara now G.V.Prakash once again Duet with 2 Heroines( Keerthy Suresh, Priya Anand) for Kadavul Irukkan Kumaaru.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil