twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி ரசிகர்களின் நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் #Gaja

    By Siva
    |

    சென்னை: நிவாரண பொருட்களில் ரஜினியின் ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்கப்படுவது அவருக்கு தெரியுமா?

    கஜா புயலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு திரையுலக பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகிறார்கள். விஜய் சேதுபதி ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கினார். ஜி.வி. பிரகாஷ் 2 லாரி நிறைய பொருட்களை அனுப்பி வைத்தார்.

    இந்நிலையில் ரஜினிகாந்த் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அளித்துள்ளார்.

     ரஜினி

    ரஜினி

    ரஜினிகாந்த் தாராள மனதுடன் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க உத்தரவிட்டுள்ளார். சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இருக்கும் நிவாரண பொருட்கள் நாளை டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இது நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம்.

    உதவி

    ரஜினி ரசிகர்கள் டெல்டா மாவட்ட மக்களுக்கு அளிக்கும் நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொடுப்பது கேலிக்கூத்தாகியுள்ளது. இது ரஜினிக்கு தெரியுமா?

    நல்ல விஷயம்

    ரஜினி ரசிகர்கள் நல்ல விஷயத்தை தான் செய்கிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் போய் ரஜினியின் போட்டோ உள்ள பேனர், ஸ்டிக்கரை பயன்படுத்துவதால் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளனர்.

    பாவம் அவர்கள்

    வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இந்த நேரத்தில் கூட தங்களுக்கு உதவியவர்களுக்கு பரிசளிக்கும் அந்த மக்களுக்கு அளிக்கும் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது சரியா?. நீங்கள் ரஜினி மீதுள்ள பாசத்தில் செய்யும் காரியம் அவரின் பெயரை கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

    English summary
    Rajinikanth is criticised after his fans use his photo bearing stickers and banners while helping people affected by Gaja cyclone.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X