»   »  ஆர்யாவின் 'செல்லாக்குட்டி' யார் தெரியுமா?

ஆர்யாவின் 'செல்லாக்குட்டி' யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்யா தனது நண்பன் சந்தானத்தை செல்லமாக செல்லாக்குட்டி என்று தான் அழைப்பாராம்.

கோலிவுட்டின் முன்னணி காமெடியன்களில் ஒருவர் சந்தானம். காமெடியனாக திரை உலகில் நுழைந்தவர் ஹீரோவாகிவிட்டார். மக்களும் அவரை ஹீரோவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். மக்களின் ஆதரவோடு அவர் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் அவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது தனது நண்பேன்டா ஆர்யா பற்றி பேசியுள்ளார்.

சைக்கிள்

சைக்கிள்

ஆர்யாவுக்கு சைக்கிளிங் போவது மிகவும் பிடிக்குமாம். உடலை கும்மென்று வைக்க அவர் சைக்கிளிங் செய்து வருகிறாராம். அவருடன் சேர்ந்து சந்தானமும் சைக்கிளிங் போவாராம்.

ஈசிஆர்

ஈசிஆர்

சென்னை ஈசிஆர் சாலையில் அதிகாலை நேரத்தில் ஆர்யாவும், சந்தானமும் சைக்கிளிங் செய்து வருகிறார்களாம். இந்த தகவலை சந்தானமே தெரிவித்துள்ளார். அதிகாலை வேளையில் ஈசிஆர் சென்றால் ஆர்யா மற்றும் சந்தானத்தை பார்க்கலாம்.

செல்லப் பெயர்கள்

செல்லப் பெயர்கள்

டிவி நிகழ்ச்சியில் சந்தானத்துடன் சில ரசிகைகளும் கலந்து கொண்டனர். அவர்களிடம் நீங்கள் சந்தானத்திற்கு என்ன செல்லப்பெயர் வைக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு ஒருவர் கெட்டபய சந்தானம் என்றும், மற்றொருவர் செல்லாக்குட்டி என்றும், இன்னும் ஒருவர் கலாய் என்று தெரிவித்தார்.

ஆர்யா

ஆர்யா

தன் ரசிகை தனது கலாய்ப்பு குணத்திற்காக செல்லாக்குட்டி என்று பெயர் வைத்ததை கேட்டு சிரித்தார் சந்தானம். ஆர்யா எப்பொழுது போன் செய்தாலும் தன்னை செல்லாக்குட்டி என்று தான் அழைப்பார் என சந்தானம் தெரிவித்துள்ளார்.

இஞ்சி இடுப்பழகி

இஞ்சி இடுப்பழகி

ஆர்யா தற்போது அனுஷ்காவுடன் சேர்ந்து இஞ்சி இடுப்பழகி படத்திலும், யட்சன் படத்திலும் நடித்து வருகிறார். அனுஷ்காவும், ஆர்யாவும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Comedian turned hero Santhanam told that his friend Arya calls him as Chellaakutty.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil